நேரம் என்பது விலைமதிப்பற்றது. இது நமக்கு நன்றாகத் தெரியும். சிறு பிராயத்தில் இருந்தே இதைச் சொல்லிச் சொல்லியே நம்மை வளர்த்தெடுக்கிறார்கள். போனால் திரும்பி வராது என்று பயமுறுத்தவும் செய்கிறார்கள். ஆனால், நாம் என்ன செய்கிறோம்? இன்று ஞாயிற்றுக்கிழமை நாளை செய்யலாம் என்று நினைக்கிறோம். சரி, இதை விட்டொழிப்பது எப்படி?
வண்ணத்துப்பூச்சியைப் பிடிக்க நினைத்தால் அது பறந்து சென்றுவிடும். மாறாக, பூக்கள் பூத்துக் குலுங்கும் தோட்டம் ஒன்றை நீங்கள் நிறுவினால் அதை நோக்கி வண்ணத்துப்பூச்சிகள் கூட்டம் கூட்டமாய் வரும் என்பார்கள்.
அதே தான், தள்ளிப்போடுதலிலும். வெறுமனே தள்ளிப் போடுதல் குணத்தைத் தவிர்க்க நினைத்தால் அது நடக்கவே நடக்காது. நீங்கள் செய்ய நினைக்கும் விஷயங்களை எல்லாம் உடனுக்குடன் செய்து விடுங்கள்.
ஏனென்றால், நாளடைவில் அவற்றை செய்ய முடியாமல் போவதற்கான வாய்ப்புகளே அதிகம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
உலகத்தை சுற்றிப் பார்க்க நினைக்கிறீர்களா? உடனே திட்டமிடுங்கள். ஒரு பிசினஸை ஆரம்பிக்க நினைக்கிறீர்களா? இப்போதே பிள்ளையார் சுழி போடுங்கள். ஜிம்முக்குப் போக நினைக்கிறீர்களா? அதையும் இன்றைக்கே செய்யுங்கள்.
உங்கள் மனது செய்ய நினைக்கும் விஷயத்தை செய்ய ஆரம்பிக்க இப்போதைவிட நல்லதொரு நேரம் என்பது இனி வரப்போவதில்லை.
நீங்கள் சோம்பேறியாக இருந்தால் யாரும் உங்களைக் காப்பாற்ற வர மாட்டார்கள்; கண்டுகொள்ளவும் மாட்டார்கள். அதேபோல்தான், நீங்கள் எல்லாவற்றையும் தள்ளிப்போடும் நபராக இருந்தால் யாரும் உங்களைப் பற்றி எள்ளவும் கவலையும் பட மாட்டார்கள். யாராலும் உங்களுடைய வாழ்க்கையை மாற்றவும் முடியாது. யாரும் உங்களுடைய வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்பதில் ஈடுபாடும் காட்ட மாட்டார்கள். இதை நீங்களேதான் சரி செய்து கொள்ள வேண்டும்.
உங்கள் நண்பர்கள் சோம்பேறிகளாக இருந்தால் நீங்களும் சோம்பேறியாகத்தான் இருப்பீர்கள். மாறாக, உங்களுடைய நண்பர்கள் கடின உழைப்பை செய்யும் குணாதிசயம் கொண்டவர்களாக இருந்தால் நீங்களும் கடின உழைப்பாளியாகவே இருப்பீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் யார் என்பதை முடிவு செய்யும் பொறுப்பும் உங்கள் வசமே இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: குழந்தைகளுக்கான சோப், ஷாம்பூவை பெரியவர்களும் உபயோகிப்பது சரியா?
டாப் 10 செய்திகள் : சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு முதல் மழை அப்டேட் வரை!
டிஜிட்டல் திண்ணை: ஹை ஸ்பீடு உதயநிதி… குறுக்கே வந்த பாஜக! ஃபார்முலா ரேஸில் பாலிடிக்ஸ் பின்னணி!
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: ‘அது இல்லன்னா… இது’ – அசத்தலாம் வாங்க!