முடி உதிர்வை குறைக்கணுமா? இந்த 6 விஷயங்களை கண்டிப்பா ஃபாலோ பண்னுங்க!

Published On:

| By Santhosh Raj Saravanan

Stop hair loss and increase growth Follow these 6 tips

முடி உதிர்வதை குறைத்து வலுவாகவும் அடர்த்தியாகவும் வளர சில அன்றாட பழக்க வழக்கங்களை பின்பற்றலாம்.

தற்போதைய காலத்தில் முடி உதிர்வு என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. வாழ்க்கை முறைகள் மாற்றம், தவறான உணவுப் பழக்கம், மன அழுத்தம் மற்றும் முடியை முறையாக பராமரிக்காதது முடி உதிர்வுக்கு (hair loss) முக்கிய காரணமாக உள்ளன. பலர் முடி உதிர்வதைத் தடுப்பதற்காக ஷாம்பு அல்லது எண்ணெயை மாற்றிப் பார்க்கிறார்கள். ஆனால், அது மட்டுமே போதுமானது அல்ல.

ADVERTISEMENT

ஆரோக்கியமான, அடர்த்தியான, வலிமையான முடியைப் பெற உங்கள் அன்றாட வாழ்க்கையில் சில நல்ல பழக்கங்களைச் சேர்த்துக்கொள்வது (good habits for hair growth) அவசியம். குறிப்பாக சரியான உணவு உண்பது, போதுமான உறக்கம், மன அழுத்தத்தை நிர்வகிப்பது மற்றும் முடியை முறையாகப் பராமரிப்பது ஆகியவை அதை வலுப்படுத்த உதவும். முடி வலிமையாக நாம் அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய பழக்க வழக்கங்கள் குறித்துப் பார்ப்போம்.

உணவில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்

ADVERTISEMENT

முடி என்பது கெரட்டின் (keratin) எனப்படும் புரத்தத்தால் ஆனது. தொடர்ச்சியான முதி உதிர்தல் பிரச்சனை உங்களுக்கு இருந்தால் உணவில் முட்டை, பருப்பு வகைகள், பசலைக்கீரை உள்ளிட்ட கீரை வகைகள், நட்ஸ் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த ஊட்டச்சத்துகள் முடியை உள்ளிருந்து வலுப்படுத்த வளர்ச்சியை அதிகப்படுத்த உதவுகின்றன.

உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம்

ADVERTISEMENT

உச்சந்தலையில் லேசான மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை (massage your scalp) மேம்படுத்தி முடியின் வேர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. ஆகவே, வாரத்திற்கு சுமார் மூன்று முறையாவது தேங்காய் அல்லது பாதாம் எண்ணெய் தடவி உச்சந்தலையில் மசாஜ் செய்வது நல்ல நன்மைகளை அளிக்கிறது.

ஷாம்புகளை தேர்ந்தெடுப்பதில் கவனம்

நாம் பல வகை ஷாம்புக்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சல்பேட்டுகள் (choosing shampoos) உள்ளன. இவை முடியின் உள்ள இயற்கையான எண்ணெய்களை அகற்றி முடியை வறண்டதாகவும், உடையக்கூடியதாகவும் மாற்றுகின்றன. ஆகவே, தலையை மென்மையாக சுத்தம் செய்யும் இயற்கை மூலப்பொருட்கள் கொண்ட ஷாம்பூக்களை தேர்ந்தெடுக்கவும். இது ஈரப்பதத்தை தக்கவைத்து முடி உடைவதை குறைக்க உதவுகிறது.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்

அதிகப்படியான மன அழுத்தமும் முடி உதிர்வதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம். ஆகவே, மன அழுத்தத்தை (Control stress) குறைக்க நாள்தோறும் 10 நிமிடங்களாவது ஆழ்ந்த சுவாசம், தியானம், யோகாசனம் செய்யலாம். இது உடலில் உள்ள மன அழுத்த ஹார்மோன்களை ஒழுங்குப்படுத்த உதவுகிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுவதால் முடி ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது.

ஆரோக்கியமான கூந்தலுக்கு நல்ல தூக்கம் அவசியம்

ஆரோக்கியமான உடலுக்கு நல்ல தூக்கம் என்பது மிகவும் (Good sleep) அவசியமாகும். போதுமான உறக்கம் கிடைப்பதன் மூலம் புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஹார்மோன்களை உடலில் சமநிலைப்படுத்துகிறது. இரவு தாமதமாக தூங்குவது, போதுமான உறக்கம் இல்லாமல் இருப்பதும் முடியை பலவீனப்படுத்தி முடி உதிர்வை அதிகரிக்கும். ஆகவே, இரவு 11 மணிக்கு முன்பே உறங்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

முடிக்கு ரசாயனம் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்

முடிக்கு டை உள்ளிட்ட ரசாயனங்கள் தடவுவதை நிறுத்திவிட வேண்டும். ரசாயனங்கள் (Avoid chemicals on hair) முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளன. அதற்கு பதிலாக கரிசலாங்கண்ணி, கருவேப்பிலை மற்றும் மருதாணியை பயன்படுத்தலாம்.

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share