நேற்று (மே 27) திங்கள்கிழமை வர்த்தகத்தில் பெஞ்ச் மார்க்ஸ் குறியீடுகள் சென்செக்ஸ் 75,390 புள்ளியும் நிஃப்டி 22,933 புள்ளிவரை உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது .
வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 19.89 புள்ளிகள் சரிந்து 75,390.50 ஆகவும், நிஃப்டி 24.65 புள்ளிகள் குறைந்து 22,932.45 ஆகவும் முடிவடைந்தது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி மற்றும் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி ஆகிய பங்குகள் திங்கள்கிழமை இன்ட்ராடே வர்த்தகத்தில் தேசிய பங்குச் சந்தையில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்ந்தது.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆப் மஹாராஷ்டிரா, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் வங்கி ஆகிய பங்குகள் 2 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை உயர்ந்தன.
Divi’s Laboratories, IndusInd Bank, HDFC வங்கி, அதானி போர்ட்ஸ் & SEZ, மற்றும் லார்சன் & டூப்ரோ பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
விப்ரோ, ஓஎன்ஜிசி, ஐஷர் மோட்டார்ஸ், அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மா, மஹிந்திரா & மகிந்த்ரா, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்,என்டிபிசி மற்றும் ஐடிசி பங்குகள் வீழ்ச்சியுடன் முடிவடைந்தது.
கர்நாடகா வங்கி பங்கு ஒன்றுக்கு 5.50 ரூபாய் டிவிடென்ட் அறிவித்து.
அஸ்ட்ரா மைக்ரோவேவ் பங்கு விலை மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை வர்த்தகத்தில் 14.25 சதவீதம் லாபத்தைக் கொடுத்து இன்ட்ராடேயில் வர்த்தகத்தில் 914 ரூபாய் என்ற புதிய சாதனையை எட்டியது.
One97 கம்யூனிகேஷன்ஸின் தொடர்புடைய நிறுவனமான Paytm General Insurance Limited (PGIL), இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் (IRDAI) ஒரு பொது காப்பீட்டு நிறுவனமாக பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுள்ளது.
கிர்லோஸ்கர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய 93.09 கோடியை ஒப்பிடுகையில். இந்த ஆண்டு 24% குறைந்து 70.73 கோடி லாபம் ஈட்டியுள்ளதாகவும். பங்கு ஒன்றுக்கு 13 ரூபாய் டிவிடெண்ட் வழங்க உள்ளதாகவும் அறிவித்து உள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவன பங்கு 2.45% விலை குறைந்தது.
மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நாட்கோ பார்மாவின் நிகர லாபம் 40.1 சதவீதம் அதிகரித்து 386 கோடியை ஈட்டியதாகவும், முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் 275 கோடியை ஈட்டியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.Divi’s Laboratories நிறுவனம் ஒருங்கிணைக்கப்பட்ட நிகர லாபமாக 538 கோடி ரூபாயை ஈட்டியதாக பதிவுசெய்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய 321 கோடியை கணக்கிடுகையில் 68% உயர்வு என்று தெரிவித்துள்ளது.
HPCL நிறுவனம் முதலீட்டாளர்கள் வசம் உள்ள பங்குகள் அடிப்படையில் போனஸ் பங்குகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.கடந்த ஏழு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக போனஸ் பங்குகளை வழங்க உள்ளது மகாரத்னா பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான ஹெச்பிசிஎல்.
இன்றைய வர்த்தகத்தில் கவனிக்க வைக்கும் பங்குகள்!
ஆதித்யா பிர்லா ஃபேஷன் & ரீடெய்ல், ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர், அபீஜய் சுரேந்திரா பார்க் ஹோட்டல்கள், ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா போன்ற நிறுவனங்கள் நான்காவது காலாண்டு முடிவுகளை இந்த வாரம் அறிவிக்க உள்ளன.
Hindustan Petroleum, Axis Bank, PFC பங்குகள் இன்றைய செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் கவனம் செலுத்தப்படும் என்று பங்குச்சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.
இன்று செவ்வாய்க்கிழமை IRCTC, ABFRL, JSW ஹோல்டிங்ஸ், GIC, NBCC, அமரராஜா எனர்ஜி & மொபிலிட்டி, Aster DM Healthcare, Campus Activewear, Eureka Forbes மற்றும் RITES Ltd உள்ளிட்ட 453 நிறுவனங்கள் நான்காவது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளன என்பதால் இவற்றின் மீது கவனம் குவிந்திருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மணியன் கலியமூர்த்தி