மணியன் கலியமூர்த்தி
உலகளாவிய பொருளாதார சிக்கல்கள் மற்றும் உள்நாட்டில் நிலவி வரும் நிச்சயமற்ற அரசியல் தன்மை ஆகிய இரட்டைத் தாக்கத்தால் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இந்திய பங்குச் சந்தையின் பென்ச்மார்க் குறியீடுகள் வியாழக்கிழமை முழுவதும் வீழ்ச்சியுடன் பயணித்து வர்த்தக இறுதியில் சென்செக்ஸ் 617.30 புள்ளிகள் சரிந்து 73,885.60 ஆகவும் நிஃப்டி 216.05 புள்ளிகள் சரிந்து 22,488.65 ஆகவும் முடிவடைந்தது.
கடந்த திங்கட்கிழமை மிட்கேப் சந்தை இறுதி மதிப்பான 419.95 லட்சம் கோடியை கணக்கிடுகையில், வியாழக்கிழமை இறுதி வர்த்தகத்தில் 412.06 லட்சம் கோடியாக சரிந்துள்ளதை ஒப்பிடுகையில் கடந்த 3 நாட்களில் சுமார் 7.88 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளனர் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள்.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸில் நேற்றைய வர்த்தகத்தில் 2,494 பங்குகள் சரிவைக் கண்டன. 1,258 பங்குகள் விலை உயர்ந்தும் 116 நிறுவன பங்குகள் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் முடிவடைந்தன.
BSE 500ல் ஐஆர்பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர், கம்மின்ஸ் இந்தியா, அல்கெம் லேபரட்டரீஸ், ஹிந்துஸ்தான் ஜிங்க், டாடா ஸ்டீல், ஜிஎம்ஆர் இன்ஃப்ரா, கேஐஓசிஎல், செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ், மிதானி மற்றும் ஹிந்துஸ்தான் காப்பர் ஆகிய நிறுவன பங்குகள் 9.33 சதவீதம் வரை சரிந்தன.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸில் ICICI Bank, Axis Bank, HDFC Bank, SBI, Bharti Airtel, Larsen & Toubro, and Kotak Mahindra Bank பங்குகள் லாபத்தையும் டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, பவர் கிரிட் கார்ப்., பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் விப்ரோ பங்குகள் நட்டத்தையும்.
தேசிய பங்குச்சந்தை நிஃப்டியில் ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் பார்தி ஏர்டெல்,பேடிஎம் பங்குகள் உயர்ந்தும் டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் விப்ரோ பங்குகள் விலை குறைந்தும் முடிந்தது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் பிஎஸ்இ ஸ்மால்கேப் 1.33 சதவீதமும், பிஎஸ்இ மிட்கேப் 1.21 சதவீதமும் ஹெல்த்கேர், பார்மா, Consumer Durables, எண்ணெய் மற்றும் எரிவாயு, எஃப்எம்சிஜி மற்றும் ஆட்டோ குறியீடுகள் தலா 1% க்கும் மேல் சரிந்தன.
அப்பல்லோ மருத்துவமனை நிறுவனம் மார்ச் 2024 உடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 77% உயர்ந்து 258 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.
மார்ச்சுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 64% சரிவைக் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய 1705 கோடியை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 611 கோடி ஈட்டியதாக தெரிவித்ததை அடுத்து வியாழக்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவன பங்கு 6%வரை சரிவை சந்தித்தன.
வங்கியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் மேலாண்மை வாரிய குழு 3200 கோடி ரூபாய் preferential issue மூலமாக மூலதன நிதி திரட்ட ஒப்புதல் அளித்துள்ளது.
புகழ்பெற்ற முதலீட்டாளரும், மறைந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவியுமான ரேகா ஜுன்ஜுன்வாலா, 2024ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் டிவிடெண்ட் மூலமாக மட்டும் 224 கோடி ரூபாய் வருமானமாக கட்டியதாக தெரிவித்துள்ளார்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான SJVNஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 61 கோடி நிகர லாபம் ஈட்டியதாகவும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஈட்டிய 17 கோடியை ஒப்பிடுகையில் இது 360% லாபம் என்று கூறியுள்ளது. SJVN நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வலுவான இருந்தாலும் நேற்று வியாழக்கிழமை வர்த்தகத்தில் இதன் பங்கு 5% அளவுக்கு சரிந்தது.
Hero MotoCorp இன் நிதிச் சேவைப் பிரிவான Hero FinCorp நிறுவனம் IPO மூலமாக 4,000 கோடி மூலதன நிதியை திரட்ட ஒப்புதல் அளித்துள்ளது.
அதானி குழுமம் Paytm நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான ஊடக அறிக்கைகளுக்குப் பிறகு கடந்த இரண்டு நாட்களாக Paytm பங்குகள் உயர்ந்துள்ளன. வியாழக்கிழமை வர்த்தகத்தில் Paytm பங்கு 5 சதவீத உயர்வை எட்டியது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் Samvardhana Motherson,Indian Bank,Mazagon Dock Shipbuilders,Cummins India நிறுவன பங்குகள் புதிய 52 வார உச்சத்தை எட்டின.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் TCS, HUDCO,KNR Constructions,Bata,Mahindra Logistics ,JSW Energy,BF Utilities,SONACOMS,Dixon Technologies,Ujjivan Small Finance Bank,PNB Housing Finance,BEL,Escorts பங்குகள் கவனம் செலுத்தப்படும் என்று பங்குச்சந்தை தரகர்கள் கணிக்கின்றனர். மேலும் நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள் பட்டியலில் M&M Financial Services,Gujarat Gas,GMR Infra,LTTS,Max Financial Services உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க ஜிடிபி தரவுகள் காரணமாக அமெரிக்க பங்குச் சந்தை நாஷ்டாக் சுமார் 1% வரை வீழ்ச்சியுடன் முடிவடைந்தது மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவை தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து ஆறாவது நாளாக சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 600 புள்ளிகளும் நிஃப்டி 216 புள்ளிகளும் குறைந்து வர்த்தகம் தொடங்கியது.
அதீனா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் லிமிடெட், பனோரமா ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் லிமிடெட், தாராய் ஃபுட்ஸ் லிமிடெட் மற்றும் VAS இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனங்கள் மார்ச் காலாண்டு முடிவுகளை இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெக்கான் டிரஸ்டிஷிப் IPO இன்று ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சூரிய உதயத்தை ரசித்த மோடி… இரண்டாவது நாளாக தியானம்!
வேலைவாய்ப்பு : HAL நிறுவனத்தில் பணி!
Singapore Open: 6 தொடர் தோல்விகள்… சறுக்கும் பி.வி சிந்து…!
புதுச்சேரியில் பள்ளிகள் ஜூன் 12-க்கு திறப்பு; தமிழகத்தில் எப்போது?
Comments are closed.