நிஜ உலகின் யதார்த்தம் பெரும்பாலும் புனைகதைகளை விட அந்நியமாக இருக்கும். அதை சொல்லும் படமாக வருகிறது ‘ஸ்டீபன்’. என்கிறார்கள்.
ஒரு மனிதன் ஒரு காவல் நிலையத்திற்குள் நுழைந்து கொலை செய்ததாக ஒப்புக்கொள்வது கதை. எது குற்ற உணர்வு எது அப்பாவித்தனம் என்ற வழக்கமான சிந்தனைகளை கேள்வி கேட்கும் படமாம் இது.
அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கத்தில், கோமதி ஷங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஸ்டீபன்’ கதை குற்ற உணர்வு, ஒழுக்கம், சரி மற்றும் தவறுக்கு இடையிலான மெல்லிய இடைவெளியை ஆராயும் த்ரில்லர் கதை என்கிறார்கள்.
படத்தின் நாயகன் கோமதி சங்கர் கதையை எழுதியவர்களில் ஒருவர். ”நாம் எழுதியதை நாமே நடிக்கும்போது மிக எளிதாகவே சிறப்பாக வருகிறது என்கிறார் அவர்.
” ஸ்டீபன் வழக்கமான கதாநாயகன் கிடையாது. பல அடுக்குகள் கொண்ட, கணிக்க முடியாத, உங்களை யோசிக்க வைக்கும் ஒரு கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில் நடித்தது சவாலானதாகவும், மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருந்தது.”என்கிறார். .
இயக்குநர் மிதுன் பாலாஜி . இந்த கதையை சொல்வது எனக்கு மிகவும் பர்சனல் ஆனால் ரிஸ்க் நிறைந்தது. இதுவே, இந்தக் கதையை சொல்ல என்னைத் தூண்டியது. “என்கிறார்
டிசம்பர் 5 ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸில் வெளிவருகிறது ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது ‘ஸ்டீபன்’ .
என்னமோ பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்றாங்க . படமும் இப்படி குழப்பமா இருந்தா புண்ணியமா போகும்.
— ராஜ திருமகன்
