தமிழ்நாடு முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3,000 வழங்கும் பணி இன்று ஜனவரி 8-ந் தேதி தொடங்குகிறது.
பொங்கல் திருநாளை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மொத்தம் உள்ள சுமார் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அத்துடன் ஒவ்வொரு அரிசி ரேஷன்கார்டுதாரருக்கும் தலா ரூ.3,000 வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.3,000-ஐ வழங்கும் பணியை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து அனைத்து ரேஷன்கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பும் ரொக்க பணமும் வழங்கும் பணியும் தொடங்கும்.
