அன்பு மழை பொழிந்த ரசிகர்கள்… கவின் எமோஷனல்!

Published On:

| By Selvam

லிப்ட், டாடா படங்களை தொடர்ந்து இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் கவின் நடித்து வந்தார். இப்படத்தில் லால், அதிதி போகன்கர், கீதா கைலாசம் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

அண்மையில் ஸ்டார் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த இளைஞர் ஒருவர் நடிகராக முயற்சிக்கிறார். இதனால் அவர் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறார். கடைசியில் அவர் நடிகரானாரா? என்பது தான் படத்தின் கதை.

”இது ஒரு மோட்டிவேஷன் கதை, சினிமா மட்டுமல்லாமல் இதை அனைவரது வாழ்க்கையிலும் பொருத்தி பார்க்க முடியும்” என்று நடிகர் கவின் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்தார்.

இந்தநிலையில், கவின் நடித்த ஸ்டார் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் ரிலீஸானது.

குறிப்பாக பல தியேட்டர்களில் ரசிகர் ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தவகையில், சென்னை வெற்றி தியேட்டரில் இன்று காலை 9 மணிக்கு ரசிகர்களுடன் சேர்ந்து கவின் படத்தை கண்டுகளித்தார்.

படம் முடிந்ததும், தியேட்டரின் மாடிப்படியில் இருந்து இறங்கிய கவினை ரசிகர்கள் சூழ்ந்தனர். தியேட்டரிலும், வெளியிலும் ரசிகர்கள் காட்டிய அன்பினால் திகைத்துப்போன கவின், கண்கலங்கினார். தொடர்ந்து தனது கைகளாலும், சட்டையாலும் கண்ணீரை துடைத்தப்படியே தியேட்டரிலிருந்து கவின் வெளியேறினார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டாரா? நீதிமன்றத்தில் நடந்த விவாதம்!

”சர்வாதிகாரத்தில் இருந்து இந்தியாவை பாதுகாப்போம்”: ஜாமீனில் வந்த கெஜ்ரிவால் ஆவேசம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share