தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!

Published On:

| By Monisha

இலங்கை கடற்படையினரால் நேற்று (நவம்பர் 16) 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “நேற்று (நவம்பர் 16) இரவு தமிழக மீனவர்கள்‌ 4 பேர்‌ உட்பட 14 இந்திய மீனவர்கள்‌ இலங்கை கடற்படையினரால்‌ கைது செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT

இந்த ஆண்டில்‌ மட்டும்‌ இதுவரை 198 தமிழக மீனவர்கள்‌ இலங்கை கடற்படையினரால்‌ சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால்‌ தமிழக மீனவர்கள்‌ அடிக்கடி சிறையிலடைக்கப்படுவதும்‌, படகுகள்‌ பறிமுதல்‌ செய்யப்படுவதும்‌ சேதப்படுத்தப்படுவதும்‌, மீன்பிடித்‌ தொழிலை முழுமையாக நம்பியிருக்கும்‌ மீனவர்களின்‌ வாழ்வாதாரத்தைப் பெரிதும்‌ பாதித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தியத்‌ தரப்பிலிருந்து பலமுறை வேண்டுகோள்‌ விடுக்கப்பட்ட பின்னரும்‌, மீனவர்கள்‌ சிறைபிடிக்கப்படும்‌ சம்பவங்கள்‌ தொடர்கிறது.

தமிழக மீனவர்களுக்குச்‌ சொந்தமான 100 படகுகள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டு தற்போது இலங்கை வசம்‌ உள்ளது. இந்திய மீனவர்களின்‌ பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப்‌ பாதுகாப்பதில்‌ தமிழ்நாடு அரசு முனைப்புடன்‌ செயல்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

பாக்‌ வளைகுடா பகுதியில்‌ நமது மீனவர்களின்‌ பாரம்பரிய உரிமைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மீறும்‌ செயல்‌ இந்தியாவுக்கு ஒரு சவால்‌ போலக் காணப்படுகிறது.

இது தொடர்பாகத்‌ தேவையான தூதரக நிலை நடவடிக்கைகள்‌ எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோனிஷா

ரசிகர்களுக்கு நடிகர் அஜித் புது அட்வைஸ்!

சவுக்கு சங்கர் 3ஆவது முறையாக கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share