தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்திக்க நேரம் கேட்டு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 1) கடிதம் எழுதியுள்ளார். Stalin writes letter PM Modi
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டிலிருந்து எனது அன்பான வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் ‘தொகுதி மறுவரையறை’ குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) கூட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டமானது, இந்தியா முழுவதிலுமிருந்து பல்வேறு அரசியல் சித்தாந்தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர் மற்றும் முக்கியத் தலைவர்களை ஒன்றிணைத்தது.

இந்த விவகாரத்தில் அரசியல் எல்லைகளை கடந்து அனைவரின் குரலும் நியாயமான தொகுதி மறுவரை நடத்த வேண்டும் என்று எதிரொலித்துள்ளது.
இந்தப் பிரச்சினை நமது மாநிலங்களுக்கும் குடிமக்களுக்கும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய மனுவை அனைத்து கட்சி எம்.பி-க்கள் அடங்கிய குழுவுடன் உங்களிடம் நேரில் வழங்க நேரம் ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் . விரைவில் உங்கள் நேர்மறையான பதிலை எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். Stalin writes letter PM Modi
