நெல்லையில் 2ம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கும் முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Pandeeswari Gurusamy

Stalin

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கூட்டணிகட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த மார்ச் 28ஆம் தேதி வெளியிட்டார். இதைத் தொடர்ந்து 29ஆம் தேதி திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானது. வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான 30ஆம் தேதி, முதல்வர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்து ரோடு ஷோ நடத்தினார்.

ADVERTISEMENT

நேற்று மாலை திருவாரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இன்று காலை திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் 9 தொகுதிகளின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில், இன்று முதல் முதல்வர் ஸ்டாலினின் இரண்டாம் கட்டத் தேர்தல் பிரச்சார விவரங்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தை முதல்வர் ஸ்டாலின் நெல்லையில் தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை விவரங்கள் பின்வருமாறு:

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share