ஸ்டாலின் அங்கிள் இட்ஸ் வெரி ராங் அங்கிள் : கடுமையாக விமர்சித்த விஜய்

Published On:

| By Kavi

மதுரை மாநாட்டில் திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் விஜய் கடுமையாக விமர்சித்து பேசினார்.

மதுரை பாரபத்தியில் தவெக இரண்டாவது மாநாடு இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்றது.

ADVERTISEMENT

அப்போது பேசிய அக்கட்சித் தலைவர் விஜய், அதிமுக பெயரை குறிப்பிடாமல் எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி என்று குறிப்பிட்டு பேசினார்.

மேலும் அவர், “பொருந்தா கூட்டணியாக பாஜக கூட்டணி இருக்கிறது. இதனால் ஆட்சியில் இருக்கிற வெற்று விளம்பர திமுக பாஜகவுடன் உள்ளுக்குள் உறவு வைத்துக்கொண்டு, வெளியில் எதிர்ப்பது போல நடிக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தால் போங்க மோடி என்று பலூன் விடுவார்கள். ஆளும் கட்சியாக இருந்தால் வாங்க மோடி என குடை பிடித்து கும்பிடுபோடுவார்கள்.

ADVERTISEMENT

அதுமட்டுமல்ல ஒரு ரெய்டு நடத்தினால் போதும், இதுவரை போகவே போகாத ஒரு மீட்டிங்கிற்கு டெல்லி போகின்றனர். அங்கு தனியாக ஒரு மீட்டிங் நடத்துகின்றனர். நல்லா நோட் பண்ண வேண்டும். அந்த மீட்டிங்கிற்கு பிறகு இந்த விஷயம் காணாமல் போயிருக்குமே. அதேதான்…

ஸ்டாலின் அங்கிள்… வாட் அங்கிள்… இட்ஸ் வெரி ராங் அங்கிள்….

ADVERTISEMENT

இப்படி தமிழ்நாட்டில் நடக்கிற ஆட்சியை பார்த்துக் கொண்டு எப்படி சும்மா இருக்க முடியும். தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால் அவர் கபட நாடக மு.க.ஸ்டாலின் அங்கிளாகவே இருந்தாலும் விடக் கூடாது.

அங்கிள், அங்கிள் உங்களுக்கு மனசாட்சி இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்…

உங்கள் ஆட்சியில் நேர்மை நியாயம் இருக்கா… ஊழல் இல்லாமல் இருக்கா… பெண்கள் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்கா, சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கா , இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கா… சொல்லுங்க மை டியர் அங்கிள்…

டாஸ்மாக்கில் மட்டும் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. அதில் மட்டுமா எல்லா துறையிலும் தான். உலகத்தில் மிஸ்டர் கிளீன் ரெக்கார்ட்ஸ் எல்லாம் உங்களுக்கும் உங்கள் கூட இருப்பவர்களுக்கும் மட்டும் தான் கொடுக்க முடியும்.

பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுத்துவிட்டால் போதுமா அங்கிள்… மூடி மறைத்துவிடலாம் என்று பார்க்கிறீர்களா? படிக்கிற இடத்தில், வேலைக்கு போகிற இடத்தில் என எங்கும் அவர்களுக்கு பாதுகாப்பே இல்லை. ஒட்டுமொத்த பெண் பிள்ளைகள் எல்லாம் கதறுகிறார்கள். இதில் உங்களை அப்பா என்றுவேற சொல்வதாக சொல்கிறீர்கள்..

வாட் இஸ் திஸ் அங்கிள்… இட்ஸ் வெரி ராங் அங்கிள்…

பெண்களுக்கு மட்டுமா பொய்வாக்குறிதிகளை கொடுத்து ஏமாற்றிகிறீர்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், மீனவர்களை ஏமாற்றுகிறார்கள். போதை பொருளை ஒழிப்போம் என்று ஏமாற்றுகிறீர்கள்…

அய்யோ வெரி வெரி வொர்ஸ்ட் அங்கிள்… எப்படி கேட்டாலும் இவர்களிடமிருந்து ஒரு பதிலும் வரபோவது கிடையாது. இப்போது ஆட்சியில் இருக்கிற நம்முடைய அங்கிள் பதில் சொல்வது இருக்கட்டும்… மக்களே நீங்கள் சொல்லுங்கள்… செய்வோம், செய்வோம் என்று சொன்னார்களே… சொன்னதெல்லாம் செய்தார்களா… (கூட்டத்தில் இருந்தவர்கள் இல்லை என்று சொல்ல)

கேட்குதா… மை டியர் அங்கிள் கேட்குதா, மக்களின் சத்தம் கேட்குதா… என கடுமையாக விமர்சித்தார்.

கூடிய விரைவில் மக்களை சென்று சந்திக்க போகிறேன் என்றும் கூறிய விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளின் வேட்பாளர்களும் விஜய் என்று நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share