ADVERTISEMENT

தெற்காசியாவிலேயே தமிழ்நாடுதான்… கோத்ரேஜ் நிறுவன தொடக்க விழாவில் ஸ்டாலின் பேச்சு!

Published On:

| By Kavi

செங்கல்பட்டு மாவட்டத்தில்,  கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவன உற்பத்தி ஆலை இன்று (மார்ச் 10) தொடங்கிவைக்கப்பட்டது. Stalin speech at the inauguration of Godrej

515 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனம், 1,010 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளது.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆலையை தொடக்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,

“கோத்ரெஜ் நிறுவனத்தின் 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) போட்டோம். அடுத்த ஐந்தே மாதத்தில் அதாவது, 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது அடிக்கல் நாட்டப்பட்டது.

ADVERTISEMENT

இப்போது, அடிக்கல் நாட்டிய ஒரே ஆண்டில் துவக்கி வைக்கக்கூடிய நிகழ்ச்சியை பார்க்கும்போது எனக்கு பெருமையாக இருக்காதா…! இல்லையா!

இந்திய வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு!

தமிழ்நாட்டில் நுகர்வோர் பொருட்களின் சந்தை, மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளை கொண்டிருக்கிறது. இந்தத் துறை மிகவும் ஆற்றல் மிக்கது, போட்டித்தன்மை கொண்டது. இனி வருங்காலங்களில், மேலும் இந்த நிலை அதிகரிக்கும். மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில், தமிழ்நாடும் ஒன்று என்பதால், தமிழ்நாடு பெரும்பாலான நிறுவனங்களுக்கு முக்கியமான சந்தையாக இருந்து வருகிறது.

பிரிட்டானியா, டாபர், ITC நிறுவனங்கள் மற்றும் உங்களின் நிறுவனமும் சேர்த்து, பல FMCG நிறுவனங்களின் உற்பத்தித் திட்டங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் துறை மேலும் வளர்ச்சி பெற தமிழ்நாட்டில் வாய்ப்புகள் ஏராளமாக இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியில், தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது என்று உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும்…!

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, உலகளாவிய பெருநிறுவனங்களுக்கும் தமிழ்நாடுதான் முதல் முகவரி! இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசியாவிலேயே முதலீடுகள் மேற்கொள்ள சிறந்த மாநிலம், தமிழ்நாடுதான்!

ADVERTISEMENT

இறக்குமதி சார்புகளை வெகுவாக குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த நாங்கள் பெருமுயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம்! எப்போதும் Positive-ஆன சிந்தனையோடு சேர்ந்த Positive-ஆன செயல்கள் எல்லாம், வெற்றியில்தான் முடியும்.
 
2030-ஆம் ஆண்டிற்குள், தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற எங்களின் இலட்சிய இலக்கை அடைவதற்கு, அனைத்து முன்முயற்சிகளையும் நம்முடைய திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது.

முதலீட்டாளர்களுக்குத் தேவையான, அனைத்து ஆதரவுச் சேவைகளையும் நம்முடைய அரசு செய்து கொண்டிருக்கிறது. அதனால்தான், ஆட்சி பொறுப்பேற்ற இந்த நான்காண்டுகளில், பல்வேறு துறைகளில் பெரும் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். ஒரு செயலை தொடர்ச்சியாக செய்தால், வெற்றி நிச்சயம்! அதைத்தான் நாங்கள் செய்து கொண்டு வருகிறோம்! தொடர்ச்சியான முயற்சிகளால் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க முடிகிறது. அந்த வகையில், உங்களின் வருகை, எங்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்திருக்கிறது!

முதலீட்டாளர்களின் முதல் முகவரி Stalin speech at the inauguration of Godrej

தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது, பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கிய, சமூகநீதியை உள்ளடக்கிய வளர்ச்சி என்ற தனித்தன்மை வாய்ந்தது! பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமத்துவம் போன்ற கொள்கைகளை அடித்தளமாக கொண்ட ஒட்டுமொத்த வளர்ச்சி என்பதால், தமிழ்நாடு மற்ற மாநிலங்களிலிருந்து தனித்து தெரிகிறது என்று உலகத்திற்கே தெரியும்! அதனால்தான் தமிழ்நாட்டில் முதலீடுகள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது!

இந்த உற்பத்தித் திட்டத்தின் சிறப்பம்சமாக, 50 விழுக்காடு அளவுக்கு பெண்களுக்கும், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதற்கு நெஞ்சார, மனதார நான் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சி பெற வேண்டும் என்று நான் அடிக்கடி குறிப்பிட்டு சொல்லி வருகிறேன். அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்தத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த மாவட்டத்தில், வேளாண்மைக்கு நிகராக தொழிற்சாலைகளும், கல்வி நிறுவனங்களும் இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அதிகம் இருப்பதால், வேலைவாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. சென்னையின் நுழைவு வாயில் என்று இந்த செங்கல்பட்டு மாவட்டத்தை சொல்வது போன்று, முதலீடுகளுக்கான இந்தியாவின் நுழைவாயிலாக, முதலீடுகளுக்கான முதல் முகவரியாக நம்முடைய தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார். Stalin speech at the inauguration of Godrej

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share