திமுக பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் மதுரை உத்தங்குடியில் நாளை (ஜூன் 1) நடைபெறுகிறது. இந்தக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் ஸ்டாலின் மதுரை சென்றார்.
மதுரை விமான நிலையத்தில் மாவட்ட செயலாளரும் வணிகவரித்துறை அமைச்சருமான மூர்த்தி மற்றும் மாவட்ட செயலாளர்கள் தளபதி, மணிமாறன் மற்றும் ஐடி துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
இன்று மாலை 5.30 மணிக்கு மதுரை பெருங்குடியில் இருந்து ஸ்டாலின் ரோடு ஷோவை தொடங்கினார். திறந்த வெளி வேனில் பயணம் செய்த ஸ்டாலினுக்கு சாலையின் இருபுறங்களிலும் தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் வேனில் இருந்து இறங்கிய ஸ்டாலின், சிறிது தூரம் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.
தொடர்ந்து ஜீவாநகர், டிவிஎஸ் பாலம், பழங்காநத்தம் ரவுண்டானா, பைபாஸ் ரோடு, காளவாசல், குரு தியேட்டர், திண்டுக்கல் ரோடு சந்திப்பு, ஆரப்பாளையம் வரை 17 கி.மீ ரோடு ஷோ மேற்கொள்கிறார். ரோடு ஷோவுக்கு பிறகு மதுரா கோட்ஸ் பாலம் அருகே புதுப்பிக்கப்பட்ட முன்னாள் மேயர் முத்துவின் சிலையை ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். Stalin road show in madurain cadres welcome
மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திமுக பொதுக்குழு கூட்டத்தால் மதுரை மாநகரமே களைகட்டியுள்ளது. Stalin road show in madurain cadres welcome