திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 1-ஆம் தேதி மதுரை உத்தங்குடியில் நடைபெற்றது. இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் மின்னம்பலத்திற்கு அளித்த பேட்டியில்,
“தேர்தலை ஒட்டிய பொதுக்குழுவுக்கு வாக்கு சேகரிப்பு தான் நோக்கம். பாமக விரிசல் உள்ளிட்ட அரசியல் விவகாரங்களை பார்க்கும்போது, திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
இருப்பினும் ஓட்டு சதவிகிதத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக ஒரு பூத்துக்கு 30 சதவிதம் வாக்காளர்களை இணைக்க வேண்டும் என்று ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். ஒருவேளை பல முனை போட்டி ஏற்பட்டால், 30 சதவிகித வாக்குகளை வைத்தே எளிதாக வெற்றி பெற்றுவிடலாம்.
மதுரையில் முன்னாள் மேயர் முத்துவின் சமூகம் அதிமுகவுகவுக்கும், பாஜகவுக்கும் சென்று விட்டார்கள். அந்த சமூக வாக்குகளை நாம் மீண்டும் பெற வேண்டும் என முடிவெடுத்து முத்துவின் சிலையை ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்” என்றார்.
முழு பேட்டியைக் காண… Stalin plan on 2026 assembly election