முன்னாள் முதல்வர் கலைஞரின் 102-ஆவது பிறந்தநாள் விழா இன்று (ஜூன் 3) ‘செம்மொழி நாள்’ விழாவாக கொண்டாடப்படுகிறது.
கலைஞர் பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இன்று காலை கலைஞர் வசித்த கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள கலைஞர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் கலைஞருக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கலைஞர் நினைவிடத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளின் போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சேகர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர். stalin pays respect to kalaignar
