நர்சிங், பார்மசி படிக்கவும் ‘நீட்’ கட்டாயமா? கொதித்தெழுந்த முதல்வர் ஸ்டாலின்… மோடிக்கு பறந்த கடிதம்!

Published On:

| By Santhosh Raj Saravanan

stalin opposes neet for allied health courses letter to pm modi

“ஏற்கனவே எம்பிபிஎஸ் (MBBS) கனவுல மண்ணை அள்ளிப் போட்டுட்டீங்க… இப்போ மிச்சம் இருக்குற துணை மருத்துவப் படிப்புகளையும் விடமாட்டீங்களா?” – தமிழக மாணவர்களின் இந்த மனக்குமுறலை எதிரொலிக்கும் வகையில், மத்திய அரசின் புதிய அறிவிப்பிற்கு எதிராகச் சண்டைக் கொடி தூக்கியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ (NEET) தேர்வு கட்டாயம் என்பதே தமிழகத்தில் இன்னும் ஆறாத ரணமாக இருக்கிறது. இந்நிலையில், ‘துணை மருத்துவப் படிப்புகளுக்கும் (Allied and Healthcare Professions) இனி நீட் தேர்வு கட்டாயம்’ என்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு, எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல மாறியிருக்கிறது.

ADVERTISEMENT

என்ன சொல்கிறது மத்திய அரசு? தேசியத் துணை மற்றும் சுகாதாரத் தொழில்முறை ஆணையம் (NCAHP) சமீபத்தில் ஒரு அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டது. அதில், “நாடு முழுவதும் உள்ள அனைத்து துணை மருத்துவப் படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்” என்று குண்டை வீசியுள்ளது.

ஸ்டாலின் ரியாக்ஷன் என்ன? இந்த அறிவிப்பு வந்தவுடனேயே, முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் முன்வைத்துள்ள வாதங்கள் இவைதான்:

ADVERTISEMENT
  • மாநில உரிமை பறிப்பு: “சுகாதாரம் மற்றும் கல்வி மாநிலப் பட்டியலில் உள்ள விஷயங்கள். இதில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுப்பது மாநில உரிமையைப் பறிக்கும் செயல்.”
  • கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு: “ஏற்கனவே நீட் தேர்வால் கிராமப்புற, ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்வியை இழந்துள்ளனர். இப்போது துணை மருத்துவப் படிப்புகளுக்கும் இதைக் கொண்டு வந்தால், அவர்களின் எதிர்காலம் முற்றிலும் இருண்டுவிடும்.”
  • உடனடி வாபஸ்: “இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மாநில அரசுகளே வழக்கம் போல் 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும்.”

ஏன் இந்த எதிர்ப்பு? தமிழகத்தைப் பொறுத்தவரை, பி.எஸ்சி நர்சிங், பார்மசி, பிசியோதெரபி போன்ற படிப்புகளுக்கு +2 மதிப்பெண் அடிப்படையில்தான் சேர்க்கை நடக்கிறது. இதுதான் கிராமப்புற மாணவர்களுக்கு எளிதாக இருக்கிறது. திடீரென இங்கும் ‘நீட்’ நுழைந்தால், கோச்சிங் சென்டர் செல்ல வசதியில்லாத மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதே அரசின் கவலை.

மாணவர்களே… இந்த நியூஸை பார்த்துட்டு உடனே பேனிக் (Panic) ஆகாதீங்க. முதல்வர் இதுக்கு ஸ்ட்ராங்கா எதிர்ப்பு தெரிவிச்சிருக்காரு. ஏற்கனவே நீட் விலக்கு மசோதாவே நிலுவையில இருக்கு. அதனால, இப்போதைக்கு நீங்க உங்க பப்ளிக் எக்ஸாம்ல அதிக மார்க் வாங்குறதுல மட்டும் கவனம் செலுத்துங்க. சட்டம் என்ன சொல்லுதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம். ஆனா, ஒரு சேஃப்டிக்கு என்சிஇஆர்டி (NCERT) சிலபஸை சும்மா புரட்டிப் பாக்குறது தப்பில்லை பாஸ்!

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share