மோடிக்கு பரிசளித்து கோரிக்கை வைத்த ஸ்டாலின்

Published On:

| By Kavi

டெல்லியில் பிரதமர் மோடியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 27) சந்தித்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (செப்டம்பர் 26) மாலை 5 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.

ADVERTISEMENT

இரவு டெல்லி சென்றடைந்ததும் முதல்வர் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று தங்கினார்.

இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு இல்லத்தில் இருந்து சுமார் 10.30 மணியளவில் டெல்லி சவுத் பிளாக்கில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு புறப்பட்டார்.

ADVERTISEMENT

அங்கு பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், ’தடம்; பெட்டகத்தை பரிசளித்தார். வாழை நார் கூடை, பனை ஓலை ஸ்டாண்ட், டெரகோட்டா சிற்பங்கள், பித்தளை விளக்கு, நீலகிரி தோடா எம்ராய்டரி போட்ட சால், பவானி ஜமுக்காளம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.

தொடர்ந்து ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கவும், சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு நிதி வழங்கவும் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

ADVERTISEMENT

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் விவகாரம், நீட் விலக்கு ஆகியவை தொடர்பாகவும் ஸ்டாலின் பிரதமரிடம் மனு கொடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

மனு பாக்கர் துப்பாக்கியின் விலை ஒரு கோடியா? – ஆச்சரியத் தகவல்!

ரூ.57 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share