அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அவருக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. Stalin indirectly criticized Edappadi palaniswami
இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி, யார் அந்த சார்? என்று கேள்வி எழுப்பியதுடன், அதிமுக ஆட்சியில் அது யார் என்று கண்டுபிடிக்கப்படும். ஸ்டாலினே நினைத்தாலும் அதை தடுக்க முடியாது என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு அமைச்சர் ரகுபதி, இல்லாத சாரை இருப்பதாக கூறும் ஒரே சார் எடப்பாடி சார் என்று விமர்சித்திருந்தார்.
இந்தசூழலில் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 2) தனது எக்ஸ் பக்கத்தில், “ பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை.
விசாரணையின் போது, உயர் நீதிமன்றமே பாராட்டிய வகையில், சென்னை மாணவி வழக்கினை நியாயமாகவும் விரைவாகவும் ஐந்தே மாதத்தில் நடத்தி முடித்து, குற்றவாளிக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம்.
தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த வழக்கில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக மகளிர் நீதிமன்றமும் முன்வந்து பாராட்டி இருக்கிறது. இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகியுள்ளது.
பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என அண்மையில் நாம் கொண்டு வந்த சட்டத்திருத்தத்துக்கு ஏற்ப, இவ்வழக்கில் (நிவாரணங்கள்) remission உள்ளிட்ட எந்தச் சலுகையும் இல்லாமல் கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றிகூறி வரவேற்கிறேன்” என்று கூறியுள்ளார். Stalin indirectly criticized Edappadi palaniswami