வயதை வென்ற வசீகரம்-கள்ளம் கபடமற்ற நெஞ்சம்- ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

Published On:

| By Mathi

Rajinikanth Stalin

நடிகர் ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் 75-வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ரஜினிகாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில், “ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்!
மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!

ADVERTISEMENT

ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் ரஜினிகாந்துக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்! என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share