திமுக ஆட்சியில் தொழில்துறை வளர்ச்சி… ஸ்டாலின் பெருமிதம்!

Published On:

| By Selvam

Stalin hails in development industry

திமுக ஆட்சியில் தொழில்துறை வளர்ச்சி அடைந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 19) தெரிவித்துள்ளார். Stalin hails in development industry

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 16-வது சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி, ஜோசப் சாமுவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது,

“உலகளவில் கண்காட்சிகளுக்கு தலைமை வகிக்கக்கூடிய பிரான்ஸ் நாட்டில் இருக்கும் UFI கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ACMEE கண்காட்சிகள் நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகளை குறைந்த விலையில் ஒப்பிட்டு பார்க்கவும், முதலீட்டாளர்களை சந்திக்கவும், இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் கூட்டு திட்டங்கள் தொடங்கவும், அதற்கு உடனடி கடன் வசதிகள் பெறவும் உதவி செய்யும்.

ADVERTISEMENT

அதனால்தான், கடந்தாண்டு 435 நிறுவனங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், இப்போது 468 நிறுவனங்கள் பங்கெடுத்திருக்கிறது. இதை, தமிழ்நாட்டின் மீதும், சென்னை மீதும், தமிழ்நாட்டு இளைஞர்கள் மீதும், உலக நிறுவனங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடாக நான் பார்க்கிறேன்.

இந்த கண்காட்சியால், தமிழ்நாடு வளரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியில், தொழில்துறை மாபெரும் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் M.S.M.E-க்களின் பங்களிப்பை கருத்தில் கொண்டு, இந்த நிதியாண்டில் இந்தத் துறைக்கு ஆயிரத்து 918 கோடியே 22 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், கடந்த அதிமுக ஆட்சியில் பத்தாண்டுகளில், 3 ஆயிரத்து 617 கோடியே 62 லட்சம் ரூபாய் தான் ஒதுக்கினார்கள். ஆனால், திமுக அரசில், அதைவிட இரண்டு மடங்காக இப்போது வரைக்கும் 6 ஆயிரத்து 626 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியிருக்கிறோம்.

இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தமிழ்நாட்டிற்கு நீங்கள் தொழிலில் முன்னேற்றம் காண வேண்டும். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் மாபெரும் பங்களிப்பை வழங்கி, தமிழ்நாட்டை இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக நிலைநிறுத்த வேண்டும். அதற்கு உங்களுக்கு துணையாக திமுக அரசு உறுதியாக இருக்கும்” என்று தெரிவித்தார். Stalin hails in development industry

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share