தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று (நவம்பர் 2) சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, ஸ்டாலின் புத்தகம் ஒன்றைப் பரிசளித்தார்.
மேற்குவங்க ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் பதவி வகித்து வருகிறார். இல.கணேசனின் அண்ணன் கோபாலன் பிறந்த நாள் விழா நாளை (நவம்பர் 3) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ளார் மம்தா.
இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சந்தித்துப் பேசினார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்திற்கு வந்த மம்தா பானர்ஜியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாசலுக்கு வந்து பொன்னாடை கொடுத்து வரவேற்றார்.

பதிலுக்கு மம்தா பானர்ஜியும், கொல்கத்தா இனிப்பு வகைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், தங்கை கனிமொழி எம்.பி. ஆகியோரிடம் வழங்கினார்.
பின்னர், மம்தா பானர்ஜிக்கு மு.க.ஸ்டாலின் Rule of the Commoner (சாமானியரின் ஆட்சி) என்ற புத்தகத்தைப் பரிசாக வழங்கினார்.
தேசிய அளவிலான தலைவர்களை சந்திக்கும்போது அவர்களுக்கு தன் பரிசாக குறிப்பிடத் தகுந்த நூல்களை வழங்குவது ஸ்டாலினின் வழக்கமாக இருக்கிறது.
அந்த வகையில்தான் மம்தா பானர்ஜிக்கு ஸ்டாலின் அளித்த புத்தகம், 1949 முதல் 1967 வரையிலான திமுகவின் உருவாக்கம் அது ஆட்சியைப் பிடித்த அரசியல் வரலாறு பற்றியது.
அந்தப் புத்தகத்தை மின்னம்பலம் வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன், ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன், வி.எம்.எஸ்.சுபகுணராஜன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.
இந்தப் புத்தகத்தின் அட்டையை பார்த்ததுமே ஆச்சரியப்பட்டு போன மம்தா, ‘நிச்சயமாக படித்துவிட்டு இதுகுறித்து உங்களிடம் பேசுகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.
ஜெ.பிரகாஷ்
அதிகாரிகள் பாஜகவுக்கு பயப்படுகிறார்களா? நேரு பேச்சின் பின்னணி இதுதான்!

Comments are closed.