தொல்லியல் சின்னங்கள் பாதுகாப்பு… ஸ்டாலின் எடுக்கும் முடிவு!

Published On:

| By Selvam

stalin from a panel to protect

பண்டைய கால தமிழர்கள், தமிழ் மொழியின் தொன்மையை தற்கால தலைமுறை அறிந்து கொள்ளும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, உலகிலேயே முதன் முதலில் தமிழகத்தில் இருந்து தான் 5,300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பின் பயன்பாடு தொடங்கியது என்று சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார். stalin from a panel to protect

இந்தநிலையில், தமிழ்நாட்டில் உள்ள தொல்லியல், வரலாற்று சின்னங்களை பாதுகாக்க புதிய ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 stalin from a panel to protect

இதில், பழங்கால சிலைகள், ஆயுதங்கள், பாண்டங்கள், கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றின் தகவல்களை பதிவு செய்து ஆவணப்படுத்த உள்ளனர்.

இந்த பழங்கால சின்னங்கள் அனைத்தையும் தமிழ்நாடு வருவாய்த்துறையின் கீழ் பதிவு செய்து, அதை பாதுகாக்கும் பொறுப்பை புதிதாக அமைக்கப்படும் ஆணையம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான பணிகளில் இந்தியா முழுவதும் உள்ள தமிழ்நாட்டின் வரலாறு, தொல்லியல் ஆய்வுகளை ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். stalin from a panel to protect

தொல்லியல் சின்னங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் ஆணையம் அமைப்பதற்காக, அடுத்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் மசோதாவை தாக்கல் செய்ய இருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே, தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் ஆணையம் மேற்கு வங்கம் மற்றும் மும்பையில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. stalin from a panel to protect

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share