இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கியுள்ளது தெரியுமா? : ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்!

Published On:

| By christopher

stalin explain the dangerous side of hindi imposition

ஒற்றை இந்தி அடையாளத்திற்கான அழுத்தம் பண்டைய தாய்மொழிகளைக் கொல்கிறது. ஆதிக்கத்தை உணர முடியாமல் போனவர்களின் தாய்மொழிகள் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் கரைந்து காணாமல் போன துயர வரலாற்றை, இந்தி பரவிய நிலப்பரப்பெங்கும் காண முடியும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். stalin explain the dangerous side of hindi imposition

இதுதொடர்பாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது கட்சித் தொண்டர்களுக்கு இன்று (பிப்ரவரி 27) கடிதம் எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

தனித்து இயங்கும் செம்மொழி ’தமிழ்’ stalin explain the dangerous side of hindi imposition

அதில், “இந்தி என்பது ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக, சமஸ்கிருதமும் மேலும் சில மொழிகளும் கலந்து திரிபடைந்ததால் உருவான மொழி. தமிழ், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மொழி. தன்னிலிருந்து திராவிடக் குடும்பத்து மொழிகளைக் கிளைத்திடச் செய்த தாய்மொழி.

தமிழ்மொழியை இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது. தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டைச் சிதைக்கும் நோக்கத்துடன் பன்னெடுங்காலமாக இனப் பகைவர்கள் நடத்திய படையெடுப்பை இந்த மண் தொடர்ந்து முறியடித்து வந்திருக்கிறது. இந்த நெடிய மரபின் தொடர்ச்சிதான் திராவிட இயக்கம்.

ADVERTISEMENT

தமிழ் தனித்து இயங்கும் தன்மை கொண்ட செம்மொழி என்பதும் இந்தியாவின் பிற மொழிகள் போல வடமொழி ஆதிக்கத்தால் சிதைவுறாமல் என்றும் நிலைத்திருக்கும் மொழி என்பதும் இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்பவர்களின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறது.

தாய் மொழிகளை சிதைத்தது இந்தி! stalin explain the dangerous side of hindi imposition

ஆதிக்கத்தை உணர முடியாமல் போனவர்களின் தாய்மொழிகள் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் கரைந்து காணாமல் போன துயர வரலாற்றை, இந்தி பரவிய நிலப்பரப்பெங்கும் காண முடியும்.

ADVERTISEMENT

பீகார் மாநில மக்களின் சொந்த மொழியான மைதிலி, அடுத்தடுத்த தலைமுறையினர் அறிய முடியாதபடி வழக்கொழிந்தது. இந்தியாவின் பெரிய மாநிலம் உத்தரபிரதேசம். இந்திதான் அந்த மாநிலத்தின் தாய்மொழி எனப் பலரும் நினைப்போம். உண்மை அதுவல்ல. பிரஜ்பாஷா,
புந்தேல்கண்டி, போஜ்புரி, அவ்தி, கண்ணோஜி, மற்றும் குமோனி என மண்ணின் மைந்தர்களுடைய மொழிகள் அனைத்தையும் இந்தி என்கிற ஆதிக்க மொழியின் படையெடுப்பு சிதைத்துவிட்டது.

இவை மட்டுமா? ஹரியாண்வி, ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி, மால்வி, நிமதி, பகேலி, சந்தாலி, சத்தீஸ்கரி, கோர்பா உள்ளிட்ட மொழிகள் பேசுவோரைத் தேட வேண்டியுள்ளது.

உ.பி, பீகார், ம.பி, ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஹரியானா, ராஜஸ்தான் என இந்தியை ஆட்சிமொழியாகக் கொண்ட மாநிலங்களின் பூர்வீக மொழிகள் சிதைக்கப்பட்டு, பண்பாட்டு விழுமியங்களும், இலக்கியச் செழுமைகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருக்கின்றன.

இந்தி-சமஸ்கிருதம் திணிக்கும் முயற்சி தான் NEP! stalin explain the dangerous side of hindi imposition

திராவிட இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வினாலும், தொடர்ச்சியான போராட்டத்தினாலும் நம் தாய்த் தமிழ்மொழி காப்பாற்றப்பட்டு, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகள் நிலைநிறுத்தப்பட்டு இருக்கின்றன.

இதனைச் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசின் NEP மூலம் இந்தி-சமஸ்கிருத மொழிகளைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனை உணர்ந்திருப்பதால்தான் தமிழ்நாடு எதிர்க்கிறது. என்றும் தமிழைக் காத்து நிற்கும் தி.மு.க.வுடன் தமிழ்நாட்டில் உள்ள பல கட்சிகளும் இணைந்து இந்தித் திணிப்பை எதிர்க்கின்றன.

தமிழ் மண்ணிற்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத – தமிழர்களின் பண்பாட்டிற்கு நேரெதிரான கொள்கைகளைக் கொண்ட பா.ஜ.க.வும் அதன் கூலிப்படையினரும் மட்டும், ‘இந்தி-சமஸ்கிருதம் என்று எங்கே இருக்கிறது? மூன்றாவது மொழியாக, இந்தியாவில் உள்ள எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். அயல்நாட்டு மொழிகளைக் கூடக் கற்கலாம்’ என்று ஒரு ‘தினுசாக’ப் பேசுகிறார்கள்.

அடடா..! இவர்களுக்குத்தான் இந்திய மொழிகள் மீது எவ்வளவு அக்கறை? மும்மொழித் திட்டம் என்ற பெயரில் என்னென்ன மொழிகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன என அட்டவணையைப் பார்த்தால் பெரும்பாலான மாநிலங்களில் இந்தி அல்லது சமஸ்கிருதமே முன்னிலைப்படுத்தப்படுகிறது.

பா.ஜ.க அரசின் தமிழ் மீதான அக்கறை! stalin explain the dangerous side of hindi imposition

தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதுகுறித்து, திருச்சி சிவா எம்.பி., தமிழ்நாட்டில் உள்ள தமிழ் ஆசிரியர்களின் நியமனம் தொடர்பாக ஏதேனும் விவரம் உள்ளதா? என்று எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் 5-8-2021 அன்று அளித்த பதிலில், K.V. பள்ளிகளில் மாநில மொழிகளுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். இதுதான் பா.ஜ.க அரசின் தமிழ் மீதான அக்கறை.

ஆரியப் பண்பாட்டைத் திணிக்க எவர் முயற்சித்தாலும் அதற்கு இந்த மண்ணில் இடம் கிடையாது என்கிற வகையில் அரை நூற்றாண்டுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கினார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா.

அந்த வரலாற்றுப் பக்கத்தைப் புரட்டினால்தான் இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களின் வஞ்சகத்தை இளையதலைமுறை புரிந்துகொள்ள முடியும்” என முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த மொழிகள் இப்போது நினைவுச்சின்னங்கள்! stalin explain the dangerous side of hindi imposition

அதே போன்று மற்ற மாநில மக்களையும் குறிப்பிட்டுள்ள அவர், “மற்ற மாநிலங்களைச் சேர்ந்த என் அன்பான சகோதரிகளே, சகோதரர்களே! இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கிவிட்டிருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

போஜ்புரி, மைதிலி, அவதி, பிரஜ், பண்டேலி, கர்வாலி, குமாவோனி, மகாஹி, மார்வாரி, மால்வி, சத்தீஸ்கர், சந்தாலி, அங்கிகா, ஹோ, காரியா, கோர்தா, கூர்மாலி, குருக், முண்டாரி மற்றும் இன்னும் பல இப்போது உயிர்வாழ்வதற்காக மூச்சுத் திணறுகின்றன.

ஒற்றை இந்தி அடையாளத்திற்கான அழுத்தம் பண்டைய தாய்மொழிகளைக் கொல்கிறது. உ.பி. மற்றும் பீகார் ஒருபோதும் வெறும் “இந்தி இதயப்பகுதிகள்” அல்ல. அவற்றின் உண்மையான மொழிகள் இப்போது கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்கள்.

இது எங்கே முடிகிறது என்பது நமக்குத் தெரியும் என்பதால் தமிழ்நாடு எதிர்க்கிறது. தமிழ் விழித்தது; தமிழின் பண்பாடு பிழைத்தது! சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன!” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share