முரசொலி செல்வத்தின் உடலை பார்த்து கதறி அழுத ஸ்டாலின்

Published On:

| By Kavi

முரசொலி நாளேட்டின் ஆசிரியரும், எழுத்தாளருமான முரசொலி செல்வம் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து  அஞ்சலி செலுத்தினார்.

முரசொலி மாறனின் தம்பி, கலைஞரின் மகள் செல்வியின் கணவர் முரசொலி செல்வம் இன்று (அக்டோபர் 10) காலமானார்.

அவரது உடல் பெங்களூருவில் இருந்து எடுத்துவரப்பட்டு கோபாலபுர இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முரசொலி செல்வத்தின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின் அவரது நெஞ்சில் இரு கைகளையும், தலையையும் வைத்து கதறி அழுதார்.

அவர் அருகே இருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோ அவரை தேற்றி அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து முரசொலி செல்வம் உடல் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிக்கு அருகே நாற்காலியில் அமர்ந்துள்ளார் ஸ்டாலின்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாமா முரசொலி செல்வம் உடலை பார்த்து கண் கலங்கினார். அமைச்சர் துரைமுருகனும்  கதறி அழுதார்.

தொடர்ந்து பலரும் முரசொலி செல்வத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

சிந்தனைச் சிலந்தி.. ஸ்டாலின் மனசாட்சி… யார் இந்த முரசொலி செல்வம்?

எங்கே போனீங்க செல்வம் மாமா? கண்கலங்கிய உதயநிதி

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share