‘அமரன்’ படகுழுவினரை வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்

Published On:

| By Minnambalam Login1

stalin congratulates amaran crew

‘அமரன்’ படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்படக்குழுவினரை இன்று(அக்டோபர் 31) வாழ்த்தியுள்ளார்.

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராஹுல் போஸ், உள்ளிட்டோரது நடிப்பில் உருவாகிய திரைப்படமான ‘அமரன்’ திரைப்படம் தீபாவளியான இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படம் தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரான கமலஹாசன் முதலமைச்சர் ஸ்டாலினைப் படம் பார்க்க அழைத்திருந்தார். அதனை ஏற்று நேற்று இரவு படத்தைப் பார்த்துள்ளார்.

படம் பார்த்த அனுபவம் குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் “நண்பர் கமலஹாசனின் அன்பு அழைப்பை ஏற்று, நேற்று ‘அமரன்’ திரைப்படம் பார்த்தேன். புத்தகங்களைப் போல் – திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ள இயக்குநர் ராஜ்குமார், மேஜர் முகுந்த் வரதராஜன் – இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் ‘அமரன்’ படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்!

நாட்டைப் பாதுகாக்கும் நமது ராணுவ வீரர்களுக்கும் – நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கும் Big Salute!” என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

போக்குவரத்துக் கழகத்தில் 2,877 காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவு!

களைகட்டும் தீபாவளி பண்டிகை : தலைவர்கள் வாழ்த்து!

தமிழக அரசின் ‘கபீர் புரஸ்கார் விருது’க்கு விண்ணப்பிக்கலாம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share