பொய், பித்தலாட்டம் சொல்வது தான் எடப்பாடி பழனிசாமியின் வேலையாக இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 14) விமர்சித்துள்ளார். Stalin condemns Edappadi Palanisamy
நீலகிரிக்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது திமுக துணை பொதுச்செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக இன்று காலை தாவரவியல் பூங்கா அருகேயுள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தேன். அது தற்போது நடந்துள்ளது. Stalin condemns Edappadi Palanisamy

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது அதிமுகவின் அவல ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று கூறினேன்.
ஆனால், இந்த தீர்ப்பு கிடைத்ததற்கு நான் தான் காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சொல்லிக்கொண்டிருக்கிறார். கொடநாடு கொலை கொள்ளை வழக்கும் விசாரணையில் உள்ளது. அதற்கும் உரிய தண்டனை பெற்றுத்தரப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று சந்தித்தார். அவர் ஏன் அமித்ஷாவை சந்தித்தார் என்பது நாட்டுக்கே தெரியும்.
ஆனால், தான் அமித்ஷாவிடம் சொல்லித்தான் 100 நாள் வேலைத்திட்டம், மெட்ரோ இரண்டாம் கட்டத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி சொல்லி வருகிறார். இப்படிப்பட்ட அப்பட்டமான பொய், பித்தலாட்டத்தை சொல்வது தான் எடப்பாடி பழனிசாமியின் வேலையாக இருக்கிறது” என்று ஸ்டாலின் தெரிவித்தார். Stalin condemns Edappadi Palanisamy