ADVERTISEMENT

பீகார்: ராகுல் காந்தியின் ‘வாக்காளர் உரிமை பேரணி’யில் ஸ்டாலின்

Published On:

| By Kavi

பீகாரில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் வாக்காளர் உரிமை பேரணியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார்.

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலம் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

வரும் டிசம்பர் மாதம் பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

பீகாரை தொடர்ந்து தமிழகமும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால் இங்கும், சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

ADVERTISEMENT

இந்த சூழலில் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையமும் வாக்குத்தெருட்டியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். 

அதைத்தொடர்ந்து வாக்கு திருட்டு தொடர்பாக வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 17ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு பிகாரில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

ADVERTISEMENT

ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பங்கேற்க இன்று (ஆகஸ்ட் 27) காலை சென்னையில் இருந்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். 

அங்கு தர்பங்காவில் நடைபெற்று வரும் பேரணியில் ராகுல் காந்தியுடன் கலந்து கொண்டுள்ளார். 

திமுக எம்பி கனிமொழி, பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், பிரியங்கா காந்தி மற்றும் பிற இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share