மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா? – மு.க.ஸ்டாலின் விளாசல்

Published On:

| By Pandeeswari Gurusamy

mkstalin

திருப்பரங்குன்றம் மலையில் நீதிமன்ற உத்தரவுகளின் படியும் நூற்றாண்டு கால மரபுப்படியும் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. ஆனால் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள எல்லைக் கல் தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தீபம் ஏற்ற வந்த பாஜகவினர், இந்துவா அமைப்பினரும் தீபம் ஏற்ற முயன்றனர். இதற்கு தமிழக காவல்துறையினர் அனுமதி மறுத்துததால் அப்பகுதியில் தொடர்ந்து அசாதாரணமான சூழல் நிலவுகிறது.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவால் மதுரையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,

“மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா?

ADVERTISEMENT

மக்கள் முடிவு செய்வார்கள்.

மெட்ரோ இரயில், AIIMS, புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்!

ADVERTISEMENT

– இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!” என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share