சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் ஸ்டாலின் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா ஆகியோர் நேற்று மாலை சந்தித்தனர்.
தமிழகத்தில் வரும் சட்டமன்றத்தேர்தலில் மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து இந்த சந்திப்பின்போது பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார். மனித நேய மக்கள் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்பது குறித்த அறிவிப்பை திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிடுவார் என்றும் அவர் கூறினார்.
