ஷாப்பிங் மால் திறக்க போன பிரியங்கா மோகன்… அப்படியே கவிழ்ந்த பரிதாபம்!

Published On:

| By Kumaresan M

தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை  பிரியங்கா அருள் மோகன். கன்னட திரை உலகின் மூலம் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த இவர், தமிழில்  முதன்முதலாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘டாக்டர்’ படத்தில் நடித்திருந்தார்.

இதில், அறிவே இல்லாத ஹீரோயின் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன்  டான் படத்திலும் ஜோடியாக நடித்தார். இந்த இரு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றது.

இன்று (அக்டோபர் 3) நடிகை பிரியங்கா மோகன் தெலங்கானா மாநிலம் வாரங்கல் அருகேயுள்ள  தோரூர் என்ற இடத்தில் ஷாப்பிங் மால் திறப்பு விழாவில் பங்கேற்க சென்றிருந்தார்.  அந்த ஷாப்பிங் மால் அருகே, இதற்காக மேடை அமைக்கப்பட்டிருந்தது. விருந்தினர்கள் சிலர் மேடையில் இருந்தனர். மேடையை சுற்றி ஏராளமான ரசிகர்களும் கூடியிருந்தனர்.

தெலங்கானா காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜான்சி ராணி, எம்.எல்.ஏ சார்ஜ் ரெட்டி நடிகை பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் மேடையில் இருந்த போது,  மேடை திடீரென்று உடைந்து போனது. இதில், பிரியங்கா மோகன் பள்ளத்தில் விழ போனார்.

உடனடியாக, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டனர். இந்த சம்பவத்தில் எம்.எல்.ஏ  சார்ஜ் ரெட்டி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த விபத்து குறித்து பிரியங்கா மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் நலமாக இருக்கிறேன். சிறு காயங்களுடன் தப்பித்துவிட்டேன் என்பதை எனது நலம் விரும்பிகளுக்கு தெரிவித்துகொள்கிறேன்.

சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். ரசிகர்கள் என்மீது காட்டிய அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 தோனிக்கு சி.எஸ்.கே பெருமை… ரோஹித்துக்கு சிறுமை செய்யும் மும்பை!

ரயில் படிக்கட்டில் பயணம்: இளைஞர் உயிரிழந்த சோகம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share