ஒரே இடத்தில் தந்தை, மகள் உடல்: நெஞ்சை பிசையும் சோகம்!

Published On:

| By Kalai

கொலையான மாணவி சத்யாவின் உடலும், தற்கொலை செய்துகொண்ட அவரது தந்தை மாணிக்கத்தின் உடலும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருப்பது காண்போரை கண்கலங்க வைக்கிறது.

காதல் விவகாரத்தில் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சத்யா என்ற கல்லூரி மாணவி நேற்று(அக்டோபர் 13) பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார்.

இந்த சோகம் தாங்காமல் அவரது தந்தை மாணிக்கம், மயில் துத்தநாகத்தை மதுவில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இருவரின் உடல்களும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பேரின் உடல்களையும் தனித்தனி மருத்துவ குழு அதிகாரிகள் பிரேத பரிசோதனை செய்தனர்.

இதையடுத்து இரண்டு பேரின் உடல்களும் ஒரே ஆம்புலன்சில் வைத்து ஆலந்தூர் காவலர் குடியிருப்புக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்தக் காட்சியைப் பார்த்து உறவினர்கள் மட்டுமல்ல, பொதுமக்கள் பலரும் கண்ணீர் வடித்தனர்.

சத்யா மற்றும் மாணிக்கத்தின் உடல்கள் பழவந்தாங்கலில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட இருக்கின்றன.

இருவரின் உடலுக்கும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் அஞ்சலி செலுத்தினார்.

கலை.ரா

அரசு விழாவில் தமிழக அமைச்சரோடு பாஜக தலைவர்

ஒரு தலை காதலுக்கு பலியாகும் பெண்கள்: நீளும் பட்டியல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share