“காவல்துறை வேலைதான் என் லட்சியம்… ஆனா தமிழ்நாடு போலீஸ் செலக்சன்ல மிஸ் ஆகிடுச்சு” என்று கவலையில் இருக்கும் இளைஞர்களுக்கு, மத்திய அரசு ஒரு மாபெரும் வாய்ப்பை அள்ளி வழங்கியிருக்கிறது. மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPFs) காலியாக உள்ள பல்லாயிரக்கணக்கான இடங்களை நிரப்ப, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 25,487 கான்ஸ்டபிள் (GD) பணியிடங்களுக்கான இந்த அறிவிப்பு, வேலை தேடும் இளைஞர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எந்தெந்த படைகளில் வேலை?
தேர்வு செய்யப்படும் நபர்கள் மத்திய அரசின் மிக முக்கியமான பாதுகாப்புப் படைகளில் நியமிக்கப்படுவார்கள்:
- எல்லைப் பாதுகாப்புப் படை (BSF)
- மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை (CISF)
- மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF)
- இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை (ITBP)
- சசாஸ்திர சீமா பல் (SSB)
- செயலகப் பாதுகாப்புப் படை (SSF)
- ரைபிள்மேன் (Assam Rifles)
- போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (NCB) – சிப்பாய்.
கல்வித் தகுதி:
மிகவும் எளிமையான தகுதிதான். அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10ஆம் வகுப்பு (SSLC/Matriculation) தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். (எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுத் தளர்வு உண்டு).
சம்பளம்:
வேலைக்குச் சேர்ந்தவுடனேயே நல்ல சம்பளம் கிடைக்கும்.
Pay Level-3: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை. (NCB சிப்பாய் பணிக்கு Level-1).
தமிழில் தேர்வு எழுதலாம்!
இதுதான் நம்ம ஊர் மாணவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய ஜாக்பாட். இந்தத் தேர்வு இப்போது தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் நடைபெறவுள்ளது. இதனால், மொழிப் பிரச்னை இல்லாமல் தைரியமாகத் தேர்வை எதிர்கொள்ளலாம்.
தேர்வு முறை:
- கணினி வழித் தேர்வு (CBT) – 80 கேள்விகள், 160 மதிப்பெண்கள்.
- உடல் தகுதித் தேர்வு (PET) – ஓட்டப்பந்தயம்.
- உடல் தரத் தேர்வு (PST) – உயரம், மார்பளவு சரிபார்ப்பு.
- மருத்துவப் பரிசோதனை.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமுள்ளவர்கள் ssc.gov.in என்ற புதிய இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31.12.2025 (இரவு 11 மணிக்குள்)
தேர்வு நடைபெறும் மாதம்: பிப்ரவரி – மார்ச் 2026
மத்திய அரசு வேலைன்னாலே ‘நமக்கு செட் ஆகாது, இந்தி தெரியாது’னு ஒதுங்கிப் போற காலம் மலையேறிடுச்சு. தமிழ்லேயே எக்ஸாம் எழுதலாம்னு சொன்ன பிறகு, நம்ம பசங்க சும்மா விடுவாங்களா? கேள்விகள் ரொம்பவும் பேசிக்காதான் இருக்கும். 10ஆம் வகுப்பு புக் சிலபஸை ஒழுங்கா படிச்சுட்டு, தினமும் காலையில் கிரவுண்ட்ல ஓடிப் பழகினா… அடுத்த வருஷம் நீங்க சென்ட்ரல் கவர்மெண்ட் ஆபீசர்! உடனே அப்ளை பண்ணுங்க.”
