எஸ்எஸ்சி (SSC) தேர்வர்களுக்கு ‘டிரிபிள்’ அப்டேட்! 2026 தேர்வுத் தேதிகள் அறிவிப்பு… சிஜிஎல் (CGL) மெயின்ஸ் பேட்டர்ன் மாற்றம் என்ன?

Published On:

| By Santhosh Raj Saravanan

ssc exam calendar 2026 cgl tier 2 mts gd constable dates

மத்திய அரசு வேலைக்காகக் காத்திருக்கும் தேர்வர்களுக்கு, எஸ்எஸ்சி (SSC) எனப்படும் பணியாளர் தேர்வாணையம் 2026ஆம் ஆண்டிற்கான மிக முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, சிஜிஎல் (CGL) டியர்-2 தேர்வுத் தேதிகள் மற்றும் எம்டிஎஸ் (MTS), ஜிடி கான்ஸ்டபிள் (GD Constable) தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1. எஸ்எஸ்சி சிஜிஎல் டியர்-2 (SSC CGL Tier-II 2025):

ADVERTISEMENT

2025ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு (CGL) டியர்-1 முடிவுகளைத் தொடர்ந்து, டியர்-2 தேர்வுக்கான தேதிகள் மற்றும் புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • தேர்வுத் தேதி: வரும் ஜனவரி 18 மற்றும் 19, 2026 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும்.
  • பேட்டர்ன் மாற்றம் (Papers Changed): டியர்-2 தேர்வில் தாள்கள் (Papers) அடிப்படையில் முக்கிய மாற்றங்கள் அல்லது தெளிவுபடுத்தல்கள் செய்யப்பட்டுள்ளன.
  • தாள் 1 (Paper-I): இது கட்டாயத் தாள் (Compulsory for all posts). இதில் கணிதம், ரீசனிங், ஆங்கிலம், பொது அறிவு மற்றும் கணினி அறிவு (Computer Knowledge), டைப்பிங் டெஸ்ட் (DEST) ஆகியவை ஒரே நாளில் நடைபெறும்.
  • தாள் 2 (Paper-II): புள்ளியியல் அதிகாரி (JSO) பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் நடைபெறும்.
  • தாள் 3 (Paper-III): உதவி தணிக்கை அதிகாரி (AAO) பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் நடைபெறும்.

2. எஸ்எஸ்சி எம்டிஎஸ் 2025 (SSC MTS 2025):

ADVERTISEMENT

10ஆம் வகுப்பு தகுதியிலான மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS) மற்றும் ஹவில்தார் பணிகளுக்கான தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

  • தேர்வுத் தேதி: பிப்ரவரி 4, 2026 முதல் தேர்வுகள் தொடங்கும்.
  • இது கணினி வழித் தேர்வாக (CBT) நடைபெறும்.

3. எஸ்எஸ்சி ஜிடி கான்ஸ்டபிள் 2026 (SSC GD Constable 2026):

ADVERTISEMENT

துணை ராணுவப் படைகளில் சேர்வதற்கான ஜிடி கான்ஸ்டபிள் தேர்விற்கான தேதியும் வெளியிடப்பட்டுள்ளது.

  • தேர்வுத் தேதி: பிப்ரவரி 23, 2026 முதல் தேர்வுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • மொத்தம் 39,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

சிஜிஎல் டியர்-2 எழுதப்போறவங்க, ‘கம்ப்யூட்டர் நாலேஜ்’ (Computer Knowledge) மற்றும் ‘டைப்பிங்’ (Typing) பத்தி அலட்சியமா இருக்காதீங்க. இதுல ஃபெயில் ஆனா, மொத்த மார்க் வாங்கியும் பிரயோஜனம் இல்லாம போயிடும். அதனால தினமும் 1 மணி நேரம் டைப்பிங் பிராக்டீஸ் பண்ணுங்க.

அதே மாதிரி, எம்டிஎஸ் மற்றும் ஜிடி கான்ஸ்டபிள் தேர்வுக்குத் தயாராகுறவங்க, ஜனவரி மாசத்தைக் முழுசா ரிவிஷனுக்குப் (Revision) பயன்படுத்துங்க. பிப்ரவரி மாசம் அடுத்தடுத்து தேர்வுகள் வருது, எக்ஸாம் ஃபீவர் வராம பாத்துக்கோங்க. ஆல் தி பெஸ்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share