சினிமா உலகில் நடிகர் – நடிகை, இயக்குனர் – நடிகை, தயாரிப்பாளர் – நடிகை என்று பல விதமான காதல்கள், உறவுகள்,தொடர்புகள், ஒப்பந்தங்கள்… அவற்றில் தியாகங்கள், துரோகங்கள் எல்லாம் உண்டு.
அவற்றில் பல, சபைக்கு வராது. விவாகரத்து செய்திகள் ஓப்பனாக வெளிப்படும் அளவுக்கு கூட இவை எல்லாம் வெளிப்படாது.
ஆனால் ஒரு படப்பிடிப்புத் தளத்தில் பலரும் பார்க்க, அடிதடியில் முடிந்த ஒரு காதல் கலவரம் இது.
நடிகை ஸ்ரீபிரியா.
இவரின் உண்மையான பெயர் அலமேலு. ஸ்ரீபிரியாவின் அக்கா மீனாட்சிக்கு தான் முதன் முதலில் நடிப்பதற்காக மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. அப்போது , ஸ்ரீ பிரியாவையும் போட்டோ எடுத்திருக்கிறார்கள். அந்த போட்டோவைப் பார்த்து ஸ்ரீ பிரியாவிற்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
சிவகுமாருக்கு ஜோடியாக ஆட்டுக்கார அலமேலு படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 12 திரைப்படங்களில் ஸ்ரீபிரியாவும் சிவகுமாரும் இணைந்து நடித்தார்கள்.
படப்பிடிப்பில் யாரிடமும் எதுவுமே பேசாமல், எப்போதும் இருக்கும் ஸ்ரீபிரியா, சிவக்குமாரை சாப்பிட்டீங்களா என்று கூட கேட்டது இல்லை. என்கிறார்கள்
ஆனால் நவரச நாயகன் கார்த்திக்கிடம் முற்றிலும் வேறு ஸ்ரீபிரியாவைப் பார்க்க முடிந்தது. கார்த்திக்குடன் ‘நினைவுகள்’ என்ற படத்தில் சேர்ந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்படுகிறது.
கார்த்திக் ஸ்ரீபிரியா விட நான்கு வயது சிறியவராக இருந்த போதும், இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்ததால், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்
கல்யாணக் கனவில் ஸ்ரீபிரியா இருக்க, , கார்த்திக் திடீரென சோலைக்குயில் படத்தில் உடன் நடித்த ராகினியை திருமணம் செய்து கொண்டார்.
விஷயம் அறிந்ததும் முதலில் அதிர்ச்சியும் அப்புறம் கோபமும் வந்து கொந்தளித்த ஸ்ரீபிரியா, கார்த்திக் எங்கே இருக்கிறார் என்று விசாரிக்க, அவர் ஒரு படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தார்.
ஆக்ரோஷமாக அந்தப் படப்பிடிப்புத் தளத்துக்குப் போன ஸ்ரீபிரியா, கார்த்திகை சரமாரியாக அறைந்து அடித்து, அங்கு இருந்த பொருட்களை எல்லாம் தூக்கிப் போட்டு உடைத்து நொறுக்கி விட்டு, கையோடு கொண்டு போன விஷத்தை கார்த்திக் முன்னாலேயே குடித்து விட்டு மயங்கி விழுந்தார்.
கோடம்பாக்கம் விதிர் விதிர்த்துப் போனது. நடுநடுங்கிப் போனார் கார்த்திக்.
மருத்துவமனையில் ஸ்ரீபிரியா காப்பாற்றப்பட்டார் . பல முன்னணி நடிகர்கள் இந்த விஷயத்தில் கார்த்திக்குக்கு ஆதரவாக தலையிட்டு ஸ்ரீபிரியாவை சமாதானப்படுத்தினர்.
பிரச்சனை ஒரு வழியாக முடிந்தது. கார்த்திக் தப்பினார்.
அதற்கு முன்பும் சரி; அதற்குப் பின்பும் சரி.. அப்படி ஒரு பொதுவெளி. காதல் சண்டையை தமிழ் சினிமா கண்டதில்லை.
எல்லாம் சரிதான். ஆனால் முன்னணி நடிகர்கள் கார்த்திக்கு ஆதரவாக களம் இறங்கியது ஏன் என்று கேட்கிறீர்களா? பின்னே? நாளைக்கு அவர்களையும் யாராவது ஒரு நடிகை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து வெளுக்கக் கூடாது இல்லையா?
