இலங்கை தமிழர்களுக்கு வீடு: ரூ.233 கோடி ஒதுக்கீடு!

Published On:

| By Selvam

இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு முகாம்களில் புதிய வீடுகள் கட்ட ரூ.233 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

2023-24 -ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து பேசுகையில், “தேசிய அளவில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலையில் உள்ளது.

ADVERTISEMENT

ரூ.66 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை ரூ.30 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப துறையில் தமிழ் மொழியை மேம்படுத்த தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்.

ADVERTISEMENT

இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு முகாம்களில் புதிய வீடுகள் கட்ட ரூ.223 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சங்கமம் கலை திருவிழா சென்னை தவிர மேலும் 8 நகரங்களில் நடத்தப்படும்.

ADVERTISEMENT

தமிழ்மொழிக்காக தாளமுத்து நடராஜனின் பங்களிப்பை போற்றும் வகையில் நினைவிடம் அமைக்கப்படும்.

அம்பேத்கரின் படைப்பை தமிழில் மொழி பெயர்க்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

செல்வம்

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது!

பாலியல் அத்துமீறல்: பாதிரியார் பெனடிக் ஆன்றோ கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share