”டெஸ்ட் மேட்ச்சா விளையாடுறீங்க?” சிஎஸ்கே அணி மீது ஆதங்கப்பட்ட ஜாம்பவான்!

Published On:

| By christopher

srikanth angry words towars csk for serial loss

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பரிதாப தோல்விக் கண்ட சிஎஸ்கே அணி குறித்து தனது ஆதங்கத்தையும், ஆலோசனையையும் கொடுத்துள்ளார் முன்னாள் இந்திய அணி வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். srikanth angry words towars csk for serial loss

சேப்பாக்கத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான நேற்றைய (ஏப்ரல் 11) போட்டியில் 103 ரன்கள் மட்டுமே குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவமானகரமான தோல்வியை சந்தித்தது.

பேட்டிங் வரிசையில் ருதுராஜ் கெய்க்வாட் இல்லாததும், அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டுகளால், இம்பாக்ட் பிளேயராக மதீஷா பதிரானாவுக்கு பதிலாக, ​​தீபக் ஹூடாவை களமிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த தோல்வியால் ஐந்து முறை சாம்பியனான சிஎஸ்கே, இந்த சீசனில் முதல் முறையாக தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்து மோசமான சாதனையை படைத்தது. கேப்டனாக தோனி மாறியபோதும், தோல்வியை தவிர்க்க முடியாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

டெஸ்ட் போட்டிக்கான ஒத்திகை! srikanth angry words towars csk for serial loss

இந்த நிலையில் 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சிஎஸ்கே அணியை சரமாரியாக தனது எக்ஸ் தள பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

அதில், “CSK அணி இதுவரை சந்தித்த மோசமான தோல்விகளில் இதுவும் ஒன்று. சென்னை அணியின் பவர்பிளே பேட்டிங் ஒரு டெஸ்ட் போட்டிக்கான ஒத்திகை போல இருந்தது. முழு அணியும் ஏக்கத்தில் திசையே தெரியாமல் ஓடுவது போல் உள்ளது” என்று விமர்சித்துள்ளார்.

மேலும் அவர், “இது சிந்திக்க வேண்டிய நேரம், இப்போது பிருத்வி ஷா போன்ற விற்கப்படாத வீரர்களை ஏன் முயற்சி செய்யக்கூடாது? நீங்கள் அதை முயற்சிப்பீர்களா? ஏனெனில் குழப்பம் கூட ஒருவகை உத்தி தான்?” என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share