சௌமியா அன்புமணி Vs ஸ்ரீகாந்தி : பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக ஸ்ரீகாந்தி நியமனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக ஸ்ரீகாந்தியை நியமித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பசுமைத் தாயகம் என்பது இந்தியாவின் சுற்றுச்சூழலியல் மற்றும் சமூகநலச் செயல்பாடுகளில் ஈடுபடும் ஒரு தன்னார்வ, அரசு சார்பற்ற அமைப்பு ஆகும். இது பாட்டாளி மக்கள் கட்சியின் சுற்றுச்சூழல் பிரிவாகச் செயல்படுகிறது. இதன் தலைவராக சௌமியா அன்புமணி செயல்பட்டு வந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே பிரச்சனை அதிகார மோதல் உச்சகட்டத்தை எட்டி வரும் நிலையில் ராமதாஸ் தரப்பு செயற்குழு மற்றும் பொதுக்குழு இன்று (டிசம்பர் 29) சேலத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பசுமை தாயகம் தலைவர் பதவியில் இருந்து சௌமியா அன்புமணியை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் பசுமைத் தாயகம் அமைப்பின் புதிய தலைவராக ராமதாஸின் மூத்த மகளும் பாமகவின் செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி நியமிக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share