சூர்யா படத்தில் நடிக்கும் ஶ்ரீதேவியின் மகள்!

Published On:

| By christopher

sridevi daughter jhanvi kapoor acting in film

சூரரைப் போற்று படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் நடிகர் சூர்யா மீண்டும் இணைந்து பணியாற்றும் படம் சூர்யா 43 புறநானூறு. 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகர்கள் துல்கர் சல்மான், விஜய் வர்மா மற்றும் நடிகை நஸ்ரியா ஆகியோர் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இது ஜிவி இசையமைக்கும் 100 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்த படத்தில் நடிகர் சூர்யா கல்லூரி மாணவராக நடிக்க உள்ளார். மேலும் இந்த படம் 80ஸ் காலகட்டத்தில் நடப்பது போல் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த படத்தில் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இது குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தியில் பல படங்களில் நடித்துள்ள ஜான்வி தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆரின் தேவரா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

கார்த்திக் ராஜா

திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

துணைவேந்தர் ஜெகநாதன் மீதான விசாரணைக்கு தடை! : உயர்நீதிமன்றம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share