மழையால் பாதிக்கப்பட்ட மேட்டுப்பாளையம் அகதிகள் முகாம் வீடுகளை விரைவில் சீரமைத்து தரும்படி இலங்கை தமிழர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள வேடர் காலனி பகுதியில் இலங்கை தமிழ் அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இலங்கையில் நடைபெற்று வந்த உள்நாட்டு போரின் பாதிப்பால் அங்கிருந்து தப்பி வந்த தமிழ் அகதிகளுக்காக கடந்த 1990-ம் ஆண்டு அரசு சார்பில் இம்முகாம் அமைக்கப்பட்டது. அங்கு சுமார் 264 இலங்கை தமிழர் குடும்பங்களைச் சேர்ந்த 730 பேர் குடியிருந்து வருகின்றனர்.
இந்த முகாமில் உள்ள குடியிருப்புகளில் கடந்த 34 ஆண்டுக் காலமாக இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக முகாமில் இருந்த பழமையான வீடுகள் சேதமடைந்துள்ளது. இந்த வீடுகளிலேயே இலங்கை தமிழர்கள் குடியிருந்து வருவதால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படும் முன்பு வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு போரால் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த தங்களுக்கு, சேதமடைந்த வீடுகளால் எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: உங்களுக்கேற்ற தலையணையில்தான் தூங்குகிறீர்களா?
குரூப் 4 ஹால் டிக்கெட்: டவுன்லோட் செய்வது எப்படி?
பெற்றோரை சந்தித்த விஜய்: புகைப்படம் வைரல்!
வெயிட் லாஸ் சிகிச்சை… மூடப்பட்ட மருத்துவமனையை திறக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு!