தமிழக மீனவர்கள் 128 பேர் கைது… ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்!

Published On:

| By Selvam

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 24) கடிதம் எழுதியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று (அக்டோபர் 23) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (24-10-2024) கடிதம் எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

அக்கடிதத்தில், “ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள், IND-TN-10-MM-459 மற்றும் IND-TN-10-MM-904 பதிவெண்கள் கொண்ட இரண்டு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் நேற்று (23-10-2024) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து மீனவர்களின் குடும்பங்களுக்கு துயரத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய கைது நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதுடன், அவை கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு இடையூறாக உள்ளது.

ADVERTISEMENT

எனவே, இதுபோன்று நம் நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களையும், 199 மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவிக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“மகாராஷ்டிராவை கொள்ளையடிக்கும் பாஜக, ஏக்நாத் ஷிண்டே” – ஆதித்யா தாக்கரே காட்டம்!

தீபாவளி… ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளுக்கு லீவா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share