இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் அணி, 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை, ஒருநாள் தொடரையும் 3-0 எனக் கைப்பற்றியது.
இதை தொடர்ந்து நடைபெற்ற டி20 தொடரின் முதல் 2 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி தனது வெற்றியை தொடர்ந்த இலங்கை, தம்புலாவில் உள்ள ரங்கிரி தம்புலா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் உடனான 3வது டி20 போட்டியில் கடந்த பிப்ரவரி 21 அன்று விளையாடியது.
இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.
இப்போட்டியில், கமிந்து மெண்டிஸ் எதிர்கொண்ட கடைசி ஓவரின் 4வது பந்து அவரின் இடுப்பிற்கு மேலே வீசப்பட்டபோதும், அவர் கிரீஸுக்கு வெளியே சென்று அந்த பந்தை எதிர்கொண்டதால், நடுவர் லிண்டன் ஹன்னிபல் அதற்கு நோ-பால் தர மறுப்பு தெரிவித்தார்.
3 பந்துகளில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தபோது, நடுவரின் இந்த முடிவு இலங்கை வீரர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. Wanindu Hasaranga banned for 2 matches
Wanindu Hasaranga's reaction to this call from the square-leg umpire 👀
"It would be better if he did some other job" 😱#SLvAFG pic.twitter.com/BfxN5vRPBt
— CricXtasy (@CricXtasy) February 22, 2024
ஆட்டம் முடிந்து இது குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் வனிந்து ஹசரங்கா,
“அந்த பந்து இடுப்பு உயரத்தில் சென்றிருந்தால் கூட எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், இன்னும் சற்று உயரம் சென்றிருந்தால், அந்த பந்து பேட்ஸ்மெனின் தலையிலேயே பட்டிருக்கும்.
இதைக் கூட பார்க்க முடியவில்லை என்றால், நடுவர் (லிண்டன் ஹன்னிபல்) சர்வதேச கிரிக்கெட்டிற்கு தகுதியற்றவர். அவர் வேறு எதுவும் பணி செய்தால், மிக நன்றாக இருக்கும்”, என ஒரு காட்டமான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.
இது குறித்து மேலும் பேசிய ஹசரங்கா, “முன்பு இதற்கு 3ஆம் நடுவரிடம் ரிவ்யூ செய்யும் முறை இருந்தது. ஆனால், அந்த வாய்ப்பையும் ஐசிசி நீக்கி விட்டது”, எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த போட்டியின்போது நடுவர்களை வனிந்து ஹசரங்கா தகாத வார்த்தைகளை பேசியதாக, அவருக்கு 3 டிமெரிட் புள்ளிகளை வழங்கிய ஐசிசி, போட்டி கட்டணத்தில் இருந்து 50% பணத்தை அபராதமாகவும் விதித்தது.
கடந்த 24 மாதங்களில் ஹசரங்கா 5 டிமெரிட் புள்ளிகளை பெற்றுள்ள நிலையில், அது ‘ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒருநாள் அல்லது டி20 போட்டிகளில் விளையாட தடை’ என மாறியுள்ளது.
மார்ச் மாதத்தில் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி, 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில், அதில் முதல் 2 போட்டிகளில் வனிந்து ஹசரங்கா விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.
மேலும், நடுவர்களின் அறிவுறுத்தலையும் மீறி, களத்தில் பேட்டின் க்ரிப்பை மாற்றியதற்காக, ஆப்கான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15% பணத்தை ஐசிசி அபராதமாக விதித்துள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி
பவுலிங்கில் மிரட்டிய ஷோபனா ஆஷா: RCB கடைசி பந்தில் த்ரில் வெற்றி!
உதயசூரியன் நாடு: கடல் கடந்த கலைஞரின் புகழ்!
சம்மர் ஸ்பெஷல் ஹெல்த் டிப்ஸ்: தினமும் இளநீர் பருகுவது ஆபத்தா?
Wanindu Hasaranga banned for 2 matches