இலங்கை அதிபர் தேர்தல் ரிசல்ட் – முன்னணி நிலவரம் இதோ!

Published On:

| By Selvam

இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (செப்டம்பர் 21) நிறைவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையானது இன்று (செப்டம்பர் 22) நடைபெற்று வருகிறது.

தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரா குமார திசநாயக்க தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதனால் அனுரா குமார திசநாயக்க இலங்கையின் அடுத்த அதிபராவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காலை 9.30 மணி நிலவரப்படி,

அனுரா குமார திசநாயக்க (தே.ம.ச.)    – 17,59,785 வாக்குகள் (43.3 சதவீதம்)

சஜித் பிரேமதாசா (ஐ.ம.ச.)              – 12,94,205 வாக்குகள் (31.0 சதவீதம்)

ரணில் விக்கிரமசிங்கே (சுயேச்சை)     – 6,25,719 வாக்குகள் (15.4 சதவீதம்)

அரியநேந்திரன் (தமிழ் வேட்பாளர்)       – 1,63,018 வாக்குகள் (3.9 சதவீதம்)

நமல் ராஜபக்சே  (இ.பொ.ப )           – 1,22,037 வாக்குகள் (2.9 சதவீதம்)

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“அதிமுக ஒன்றிணையக் கூடாது என்பதற்காகவே முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு”… ஓபிஎஸ்

இலங்கை அதிபர் தேர்தல்: ரணில் விக்ரமசிங்கே பின்னடைவு… அனுர குமார திசநாயக்க முன்னிலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share