அட்டூழியங்கள் ஓயவில்லை…மேலும் 22 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை

Published On:

| By Mathi

Fishermen

தமிழகத்தின் ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை கடற்படையால் அண்மையில் காரைக்காலைச் சேர்ந்த 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து மேலும் 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ADVERTISEMENT

ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 22 மீனவர்களை 4 விசைப்படகுகளுடன் கைது செய்துள்ளது இலங்கை கடற்படை. இலங்கை கடற்படையின் இந்த அட்டூழியத்துக்கு முடிவே இல்லாமல் இருப்பது தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share