மழையால் ஆட்டம் ரத்தான நிலையில், வெற்றி வாய்ப்பை இழந்த ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. srh joins with csk and rr by eliminatd from ipl 25
ராஜீவ் காந்தி மைதானத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி, அக்ஷர் படேல் தலைமையிலான டெல்லி அணியை நேற்று (மே 5) இரவு எதிர் கொண்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் தொடக்க வீரர் கருண் நாயர் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஃபாஃப் டு பிளெசிஸ் (3), அபிஷேக் போரெல் (8), கே.எல். ராகுல் (10), கேப்டன் அக்சர் படேல் (6) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் 7 ஓவர்களில் வெறும் 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சரிவை சந்தித்தது டெல்லி அணி.
எனினும் அடுத்து வந்த ஸ்டப்ஸ் (41*) மற்றும் அசுதோஷ் சர்மா (41) பொறுப்புடன் நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதனால் டெல்லி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளுக்கு 133 ரன்களை எடுக்க முடிந்தது.
ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
தொடர்ந்து 134 ரன்களுடன் வெற்றி என கனவு கண்ட ஹைதராபாத் அணிக்கு மழை முட்டுக்கட்டையாக வந்தது.

மழை நின்றவுடன் போட்டித் துவங்கும் என எதிர்பார்த்த நிலையில், தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இதனால் இரு அணிக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. எனினும் வெற்றி வாய்ப்பை இழந்த ஹைதராபாத் அணி பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வெளியேறியது.
