வெந்தயத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளதால், உங்கள் உடல்நலப் பிரச்சினைகள் அனைத்தையும் போக்க உதவும். முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிடுவதால் இரண்டு மடங்கு பலனை பெறலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், முளைத்த வெந்தயத்தில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. அப்படிப்பட்ட முளைகட்டிய வெந்தயத்தில் ரைத்தா செய்து வீட்டில் உள்ள அனைவரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
என்ன தேவை?
முளைகட்டிய வெந்தயம் – ஒரு கப்
தயிர் – அரை கப்
உப்பு – தேவையான அளவு
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் முளைகட்டிய வெந்தயம், தயிர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : கலர்ஃபுல் குடமிளகாய் மிக்ஸ்
கிச்சன் கீர்த்தனா : வால்நட் கீர்
டிஜிட்டல் திண்ணை: காங்கிரசுக்கு ஸ்டாலின் வைத்த செக்!
டெல்லியில் துரைமுருகன்… ஜல்சக்தி அமைச்சரிடம் அடுக்கிய கோரிக்கைகள் என்னென்ன தெரியுமா?