தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பரவலாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கையாக தமிழக சுகாதாரத்துறை முக்கியமான அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.
அதில்,
- முதியவர்கள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் பொது இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்
- காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனையை நாட வேண்டும்
- அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும்
- சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை பாதிப்பு அறிகுறியோடு வந்தால், மாதிரிகளை சேகரித்து மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்
- மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வோர் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
