நைரோபியில் நடைபெற்ற ஐசிசி டி20 ஆடவர் போட்டியில் காம்பியா அணிக்கு எதிராக ஜிம்பாப்வே அணி பல சாதனைகளை படைத்துள்ளது. ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா, 33 பந்துகளில் சதம் அடித்து ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார். ரோஹித் சர்மா 35 பந்துகளில் டி20 போட்டியில் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் விளையாடும் நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் அடித்த அதிவேக டி20 சதம் இதுவாகும். சிக்கந்தர் ரசா 43 பந்துகளில் 7 பவுண்டரிகள் 15 சிக்சர்களுடன் 133 ரன்கள் விளாசினார். அதே போல் டி20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே 344 ரன்களை குவித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளது. காம்பியா அணி 54 ரன்களுக்குச் சுருண்டதால் ஜிம்பாப்வே அணி 290 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்து. இது மற்றொரு சாதனை ஆகும்.
மொத்தம் 27 சிக்சர்கள் இந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி அடித்தது. இதற்கு, முன் 26 சிக்சர் அடித்ததுதான் சாதனையாக இருந்தது. அதே போல் நேபாளம் வைத்திருந்த அதிக டி20 ரன்களான 314 ரன்களை ஜிம்பாப்வே முறியடித்து, புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்டத்தில் மொத்தம் 57 பவுண்டரிகள் ஜிம்பாப்வே அடித்தது. இது இன்னுமொரு டி20 சாதனையாக சொல்லப்படுகிறது.
நான்கு ஜிம்பாப்வே வீரர்கள் அரைசதம் கண்டதும் டி20 சாதனை தான்.காம்பியா அணி பந்துவீச்சாளர் மியூசா ஜொர்பாத்தே 4 ஓவர்களில் 93 ரன்களை வாரி வழங்கினார். டி20 பந்து வீச்சாளர்களில் அதிக ரன்களை வாரி வழங்கியதும் இவர்தான்.
காம்பியா என்ற நாடு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சிறு நாடு. 24 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். ஐசிசி டி20 ஆடவர் உலகக் கோப்பை சப் ரீஜனல் ஆப்பிரிக்கா பிரதேசத் தகுதிச் சுற்றுப் போட்டியில் காம்பியா பங்கேற்ற போதுதான், இரக்கமே இல்லாமல் ஜிம்பாப்வே அணி வீரர்கள் நடந்து கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தில் அதிர்வா? : நேரில் ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!
ஓவியாவின் அடுத்த வீடியோ… பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்!