’ஜாகீர்… அத பாத்தியா?’ : சிறுமியின் பெளலிங்கை கண்டு வியந்த சச்சின் – வீடியோ உள்ளே!

Published On:

| By christopher

ஜாகீர் கான் பெளலிங் ஸ்டைலை அப்படியே பிரதி எடுத்து வீசும் சிறுமியின் பந்துவீச்சை கண்டு சச்சின் ஆச்சரியமடைந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்றால் ஜாகீர் கான் என்பதில் யாரும் மறுக்கவே முடியாது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் கனவான உலகக்கோப்பையை 2011ஆம் ஆண்டு வென்றதில் அவரது பங்கு மிக முக்கியமானது. இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதல் ஐந்து ஓவர்களில் மூன்றை மெய்டனாக வீசியதோடு, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்குவழிவகுத்தார் ஜாகீர் கான்!

அந்த தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசிய அவர் 9 போட்டிகளில் விளையாடி அதிக விக்கெட்டுகளை (21 விக்கெட்டுகள்) கைப்பற்றினார்.

ஜாகீர் 2014ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியோடு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முழுக்கு போட்டு ஒரு தசாப்தமே ஆகிவிட்டது.

எனினும் இன்று வரை இந்திய அணியில் அவரைப் போன்ற ஒரு சிறந்த இடது வேகப் பந்துவீச்சாளரை கண்டெடுக்க முடியவில்லை என்பது ஒரு குறையாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களாக அச்சு அசலாக ஜாகீர் கானைப் போலவே பந்துவீசும் ஒரு சிறுமியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட இந்திய ஜாம்பவான் சச்சின் நேற்று மாலை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

மேலும், ஜாகீர் கானை குறிப்பிட்டு, “ஜாகீர் நீங்கள் பார்க்கிறீர்களா? எளிதாக, எந்த சிரமும் இல்லாமல், பார்ப்பதற்கே அழகாக பெளலிங் செய்யும் சுசீலா மீனாவின் பந்துவீச்சில் உங்க சாயல் தெரிகிறது” என தெரிவித்திருந்தார்.

அதற்கு பதில் அளித்துள்ள ஜாகீர் கான், “இதை நம்பவே முடியவில்லை. அவளுடைய பந்துவீச்சு ஈர்க்கிறது. அவளது உடல்மொழி நிறைய நம்பிக்கை அளிக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் பந்துவீச்சில் ஒவ்வொரு உடல்மொழி வெளிபடும். அதனை பொறுத்தே பந்துவீச்சின் வேகம், தாக்கம் இருக்கும்.

இந்த நிலையில் ஜாகீரின் பெளலிங் ஸ்டைலை அப்படியே பிரதியெடுத்துள்ள சுசீலா மீனாவின் வீடியோ சச்சின், ஜாகீர் பகிர்ந்துள்ள நிலையில், இன்னும் வேகமாக சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னை டூ பினாங்கு தீவிற்கு இன்று முதல் நேரடி விமான சேவை!

டாப் 10 நியூஸ் : குவைத் செல்லும் பிரதமர் மோடி முதல் பூமிக்கு அருகில் 2 சிறுகோள்கள் வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share