Yuzvendra Chahal: தற்போது நடைபெற்றுவரும் 2024 ஐபிஎல் தொடரில், 56வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மாற்றம் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிக்கொள்கின்றன. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்நிலையில், ராஜஸ்தான் அணிக்காக பந்துவீச வந்த யுஸ்வேந்திர சாஹல், ஆட்டத்தின் 14வது ஓவரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டின் விக்கெட்டை கைப்பற்றினார்.
இதன்மூலம், யுஸ்வேந்திர சாஹல் டி20 கிரிக்கெட்டில் 350 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். மேலும், டி20 கிரிக்கெட்டில் இந்த இலக்கை எட்டும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் சாஹல் பெற்றுள்ளார்.
சாஹலுக்கு அடுத்தபடியாக, டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில், பியூஷ் சாவ்லா 310 விக்கெட்களுடன் 2வது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில், 306 விக்கெட்களுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் 3வது இடத்திலும், 297 விக்கெட்களுடன் புவனேஷ்வர் குமார் 4வது இடத்திலும், 285 விக்கெட்களுடன் அமித் மிஸ்ரா 5வது இடத்திலும் உள்ளனர்.
முன்னதாக, ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்களை கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையையும் யுஸ்வேந்திர சாஹல் பெற்றிருந்தார்.
மேலும், டி20 வரலாற்றில் 350 விக்கெட்களை கடந்த 11வது வீரர் என்ற பெருமையையும் சாஹல் பெற்றுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில், மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த டுவைன் பிராவோ 625 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து, ரஷீத் கான் 572 விக்கெட்களுடன் 2வது இடத்திலும், மற்றொரு மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த வீரரான சுனில் நரேன் 549 விக்கெட்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
“இப்படி எல்லாம் சோதனை செய்யலாமா?” : நீட் தேர்வு குறித்து சீமான் அமீர் கேள்வி!