என் மகனை வைத்து கபில்தேவை பழி வாங்கி விட்டேன்: யுவராஜ்சிங் தந்தை ஆவேசம்!

Published On:

| By Kumaresan M

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின்  கேப்டன் கபில் தேவ் குறித்து மோசமான கருத்துகளை தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை தோனி அழித்து விட்டதாகவும், தனது கிரிக்கெட் வாழ்க்கையை கபில்தேவ் அழித்து விட்டதாகவும் யோகராஜ் கருதுகிறார்.

கடந்த 1981 ஆம் ஆண்டு கபில் தேவ் மற்றும் யோக்ராஜ் சிங் இந்திய அணியில் இடம் பெற்று இருந்தனர். அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்தார் கபில் தேவ்.

அந்த சமயத்தில் யோக்ராஜ் சிங் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட கபில்தேவ்தான் காரணம் என்று நினைத்துள்ளார்.  அப்போதிருந்தே, கபில் தேவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார்.

இதனால், யுவராஜ் சிங் பிறந்த போது கபில் தேவை பழிவாங்குவதற்காக அவனை  கிரிக்கெட் ஆட வைப்பேன் , மிகப் பெரிய கிரிக்கெட் வீரராக்குவேன் என்று சபதம் போட்டதாக முன்னர் ஒருமுறை கபில்தேவ் பற்றி யோக்ராஜ் கூறியிருந்தார்.

தற்போது அளித்த ஸீ ஸ்விட்ச் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கபில் தேவை, யுவராஜ் சிங்குடன் ஒப்பிட்டுள்ளார்.  எங்கள் கால கட்டத்தில் மிகச் சிறந்த கேப்டன் கபில் தேவ்.  நான் அவரிடம் இந்த உலகம் உன்னை தூற்றும்படி செய்வேன் என்று கூறியிருந்தேன்.

இன்று யுவராஜ் சிங் 13 கோப்பைகளை வென்று விட்டார். நீ வெறும் ஒரு கோப்பை மட்டும் வென்றுள்ளாய் என்று கபில்தேவ் பற்றி யோக்ராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த 1983 ஆம் ஆண்டு முதன்முறையாக இந்தியாவுக்கு  உலகக் கோப்பையை வென்று கொடுத்த கபில்தேவை, யோக்ராஜ் இப்படி விமர்சித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

அடுத்த ஏழு நாட்களுக்கு…. வானிலை மையம் முக்கிய அப்டேட்!

நடிகர் விஜயகாந்தின் முதல் தயாரிப்பாளர் யார் தெரியுமா? சமீபத்தில் உயிரிழந்த சோகம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel